Wednesday, August 25, 2010
சுதந்திரதின விழா
சென்ற 2010 ஆகஸ்ட் 15ந் தேதி நமது இந்திய திருநாட்டின் 63வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை அசோக் நகர் 11வது வைகை காலனியில் எண்: 95/1 ல் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தும் விதமாக ஒரு சிறிய விழா ஏற்பாடு செய்ய, கல்வி டிரஸ்டின் ஸ்தாபகரும் நண்பருமான திரு. சுப்பிரமணியன் @ சரவணன் அவர்களும் நானும் முடிவு செய்து தமிழ்நாடு மாற்று திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைமைநிர்வாகி (சேர்மேன்) திரு. T A.P.வரதகுட்டி, .B.Com, F.C.A, அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைத்தோம். ஆனால் அன்றைய நேரத்தில் வேறு விழாவுக்கு ஒப்புதல் அளித்திருந்ததால், அவரின் வழிகாட்டின்படி, மாநில சங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் நண்பருமான திரு.கி. கோபிநாத் அவர்களின் தலைமையில் மாநிலசங்க நிர்வாகி திரு.வைரமணி அவர்களும், வைகை காலனி பெரியவர்கள் திரு. மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துக் கொள்ள, லிட்டில் பிளவர் கான்வென்டில் 9 ம்வகுப்பு பயின்று வரும் விழிப் பார்வையிழந்த மாற்றுத் திறனாளி மாணவி, செல்வி. ஸ்ரீலேகா கடவுள் வாழ்த்துடன் தேசபக்தி பாடல்களையும் பாட, நான் சுதந்திரதினத்தை முன்னிட்டு ஒரு கவிதையையும், மாநிலசங்கத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நண்பர் கோபிநாத் அவர்களை வாழ்த்தி ஒரு கவிதையையும் வாசித்தளிக்க, திரு.சுப்பிரமணியம் நன்றியுரை கூற விழா சிறப்பாக நடைப்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)
