Friday, December 6, 2013

ஊக்கம் கொடுத்தால் பொங்கும் திறமை.


மேட்டூர் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் பகல் நேர பாதுகாப்பு மையத்தில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள 17 மாற்றுத்திறனாளிக்  குழந்தைகள் உள்ளனர்.

அவர்களுக்கிடையே, உலக  மாற்றுத்திறனாளர் தினத்தை முன்னிட்டு, ஓட்டப்பந்தையம், மியூசிகல் சேர் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், அவர்களின் பெற்றோர்களையும் வரவழைத்து  நடத்தப்பட்டது. மூளை வளர்ச்சிக் குன்றிய  குழந்தைகளும் ஆர்வமுடன் கலந்துக் கொண்டதும், வெற்றிப் பெற்ற குழந்தைகள், பரிசுகள் எப்போது தருவார்கள் என்ற ஆர்வத்துடன் கேட்டது, பெற்றோர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.

தினமும் பெற்றோரால் தூக்கி வரப்படும் மாற்றுத்திறனாளிப் பெண் குழந்தை காவ்யா, எப்போதும் படுத்தபடியே இருப்பாள். ஆனால் அன்று சேரில் அமர்ந்து போட்டியைக் கண்டு கழித்ததுடன்,  போட்டியில் கலந்துக் கொண்ட சக குழந்தகளை உற்சாகப்படுத்தியது, ஆசிரியர்களை வியக்க வைத்தது.  

Wednesday, December 4, 2013

சேவைக்கு தலை வணங்குவோம்.


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(200/10-09-2013)

கோவை மாநகராட்சி காப்பகத்தில், 10-09-2013 அன்று நமது ஈரநெஞ்சம் சார்பாக மாற்றுதிறனாளியான திரு A. யேசுராஜ் என்பவர் மூலமாக அங்குள்ள ஆதரவற்றோருக்கு முடித்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தான் மாற்றுத்திறனாளியாக இருந்த போதும் ஆதரவற்றோருக்கு மனமுவந்து முடிதிருத்தம் செய்ய முன்வந்த அவரது நல்ல மனதை ஈரநெஞ்சம் சார்பாக மனதார பாராட்டி நன்றி தெரிவித்து கொள்கிறோம். அவரது சேவை கலந்து உழைப்பு மேலும் சிறப்புற வாழ்த்துகிறோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

We are happy to inform you all that a hair fixing service was given to all the inmates of the Coimbatore Corporation Home on 10-09-2013 on behalf of Eera Nenjam by Mr. A. Yesuraj, a physically challenged. Even though he is a physically challenged he has great soul to help ohphaned people. Eera Nenjam appreciates him wholeheartedly.

~Thanks
Eeraneanjam

Sunday, December 1, 2013

குறை ஒரு தடையில்லை




காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். 5 வயதில் கண் பார்வையை இழந்த அவர் 8வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து அங்கேயே 11ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார்.

இதையடுத்து ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமும், அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களும் பெற்றார். பார்வையற்ற மாணவர்களுக்காக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் என்ற அமைப்பு 198ம் ஆண்டு துவங்கப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.

பார்வையற்ற ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவராக 2 முறை இருந்துள்ளார். கடந்த 1984ம் ஆண்டு அவருக்கு முதுகலை ஆசிரியராக பணிநியமனம் வழங்கப்பட்டது. இதையடுத்து 3.12.1984 அன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கிலம் ஆசிரியராக சேர்ந்து அங்கேயே 4 ஆண்டுகள் பணியாற்றினார்.

இதைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சீபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தில் பார்வையற்ற ஒருவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டிருப்பது இது தான் முதல் முறை ஆகும். தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறுகையில், நான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கும் இந்த பள்ளியில் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் என் லட்சியம் என்றார்.

# பார்வையற்ற நிலையிலும் சிறப்பாக பயின்று செயல்புரிந்து, தலைமை ஆசிரியராக உயந்திருக்கும், திரு.மனோகரன் அவர்களின் இலட்ட்சியங்கள் நிறைவேறி, சிறப்பான நிலையடைய வாழ்த்து வோம் நண்பர்களே!

Tuesday, November 19, 2013

திறமைக்கு தடையில்லை - 1



சொர்க்கத்தில் முடிவென்று சொன்னவன் யாரடா

பக்கத்தில் அவன் இருந்தால் பறக்கும் பல்லடா

சாமானியன் என்பதின் அர்த்தம் தான் என்னடா

சாதிக்க நினைப்பவன் சறுக்கினால் சிரிப்போடா

சாமிக்குப் படைத்தால் பெய்திடும் மழையோடா

விதி செய்த சதி என்ற முழக்கத்தை அகற்றடா

அலைபோலே நீ எழுந்து வெற்றிக் கொடிநாட்டடா


நன்றி: Kannan Kannarasan

Saturday, November 16, 2013

உற்சாகப்படுத்துவோம் வாழ்த்துக்கள் கூறி.



மாற்றுத்திறனாளிகளுக்கான, தேசிய பாரா (ஒலிம்பிக்?)  நீச்சல் போட்டியில், திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற தமிழக வீரர்கள்,  5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

பெங்களூருவில், 13வது தேசிய பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டியில், 17 மாநிலங்களை சேர்ந்த 340 மாற்றுத்திறனாளிகள், மொத்தம் 176 பிரிவுகளில் பங்கேற்றனர்.

திண்டுக்கல்லில் பயிற்சி பெற்ற 15 மகளீர் உள்பட 39 பேர் பங்கேற்ற தமிழக அணியில், 13 பேர்,    5 தங்கம், 10 வெள்ளி, 12 வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

சப்-ஜூனியர் மகளீர் பிரிவில் சென்னையை சேர்ந்த மயூரி, 3 தங்கம் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார். சீனியர் ஆண்கள் பிரிவில் தர்மபுரியை சேர்ந்த வெங்கடேசன் 2 தங்கம், 2வெள்ளி பதக்கங்கள் பெற்று சாம்பியனானார். மதுரையை சேர்ந்த பெருமாள் 2 வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்ற ஆண்டு 7ஆம் இடத்திலிருந்த தமிழகம், 5ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.வெற்றிப் பெற்ற மாற்றுத்திறனாளி நீச்சல் வீரர்களை, தமிழ் நாடு அனைத்து  மாற்றுத்திறனாளிள் சார்பிலும் மேலும் ஊக்கத்துடன் செயல்பட்டு உலக பாரா ஒலிம்பிக்கிலும் சாதனைப்படைக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். பதக்கங்கள் பெறாதவர்கள் தோல்வியாளர்கள் அல்ல. அடுத்த முறை சிறப்பான சாதனையாளர்களாக திகழவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களே! நீங்களும் வாழ்த்துங்களேன்.

# இதுவரை போட்டிகளைப் பற்றி அறியாத, அறிந்தும் கலந்துக் கொள்ளாத மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளே! உங்கள் திறமையை வெளிச்சத்திற்கு கொண்டு வாருங்கள். உங்கள் மாவட்ட சமுக நலத்துறையை அணுகி, உங்களை பதித்துக் கொள்ளுங்கள். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும் வரை பயிற்சியைத் தொடருங்கள். வாழ்த்துக்கள்.  


Tuesday, November 12, 2013

உறுதியிருந்தால்....

ங்கள் வெற்றியால் சமுதாயத்துக்கு உணர்த்துவோம் - கார்மென்ட்ஸ் தொழிலில் கலக்கும் திருநங்கைகள்

திருநங்கைகள் என்றாலே ஏளனமாகத்தான் பார்க்கிறது இந்த சமூகம். வக்கிரப் பார்வை, பாலியல் தொல்லை, கேலி, கிண்டல், சமூக புறக்கணிப்பு என அத்தனை அவலங்களையும் சகித்துக்கொண்டு, இன்றைக்கு பல துறைகளிலும் திருநங்கைகள் சாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி சாதித்தவர்களுக்கு பாரதி கண்ணம்மாவும் பிரியா பாபுவும் நல்ல உதாரணங்கள்.

மதுரையின் புறநகர் பகுதியில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது இவர்களின் ஆயத்த ஆடை (ரெடிமேட் கார்மென்ட்ஸ்) தயாரிப்பு மையம். அங்கே பாரதி கண்ணம்மாவையும் பிரியா பாபுவையும் சந்தித்தோம். முதலில் பாரதி கண்ணம்மா பேசினார்.

‘‘இந்த வருஷம் ஒன்பதாம் மாசம், ஒன்பதாம் தேதி இந்த கார்மென்ட்ஸ் சென்டரை ஆரம்பிச்சோம். என்ன.. எல்லாமே ஒன்பதா வருதேன்னு பார்க்குறீங்களா? தப்பா நெனச்சுடாதீங்க. அன்னைக்கு விநாயகர் சதுர்த்திங்கிறதால தொடங்கினோம்’’ இந்தச் சமூகம் தங்களுக்குச் சூட்டி வைத்திருக்கும் இழிவான பட்டப்பெயரை மறைமுகமாக அவர் சுட்டிக்காட்டி வருத்தப்பட்டதை உணர முடிந்தது. பாரதி கண்ணம்மா தொடர்ந்தார்..

எல்லாரும் திருநங்கைகளுக்கு ஆதரவாக இருக்க மாதிரி பேசுவாங்க. ஆனா வேலை கேட்டுப் போனா, யாரும் தர மாட்டாங்க. ‘உங்கள வேலைக்கு வச்சா, மத்தவங்க வரத் தயங்குவாங்க. உள்ள பொழப்பும் கெட்டுப் போயிரும்மா’ன்னு சொல்லி 500 ரூபாயை கையில குடுத்து அனுப்பி வைச்சிடுறாங்க.

சமுதாயம் நம்மள ஏத்துக்கணும்னா அவங்க விரும்புற துறையை நாம தேர்வு செய்யணும். அதனால தான் கார்மென்ட் தொழில்ல இறங்கிப் பார்க்கலாங்கிற ஐடியா தோணுச்சு. சில நல்ல உள்ளங்களோட உதவியால, கோவையில இருக்கற தைலா நிறுவனம் எங்களுக்கு தொழில் வாய்ப்பு தர முன் வந்தாங்க. இதுவரை கிட்டத்தட்ட ரூ.11 லட்சம் வரைக்கும் செலவு செஞ்சு இந்த ஆடை தயாரிப்பு மையத்தை உருவாக்கி இருக்கோம்.

ஆர்டர் பிடிக்கிறது, வரவு செலவு பார்க்கிறதுன்னு எல்லா வேலையும் திருநங்கைகள்தான் பண்றோம். டைலரிங் வேலைக்கு மட்டும் வெளியில இருந்து சில பெண்கள் வர்றாங்க. ஏன்னா.. ‘ஒரு வீதி சுத்திட்டு வந்தாலே ஐநூறூ ரூபா கிடைக்கும். ஆனா.. டைலரிங் வேலைய நாள் முழுசும் பார்த்தாலே முந்நூறு கூட சம்பாதிக்க முடியாது’ன்னு சொல்லி பல திருநங்கைகள் இந்த வேலைக்கு வரத் தயங்குறாங்க. எது கவுரமான வேலைன்னு அவங்களுக்கு இன்னும் தெரியாமலே இருக்கு.. என ஆதங்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பிரியாபாபு, ‘‘முதல் மாசம், எதிர்பார்த்தபடி எங்க இலக்கை எட்டிட்டோம். அதனால இங்க வேலை பார்த்தவங்களுக்கு வாரச் சம்பளத்தோட, தீபாவளி போனஸ்கூட போட்டிருக்கோம். ரெண்டாவது மாசத்துக்கு கூடுதலா மெட்டீரியல் கேட்டிருக்கோம். திருநங்கைகள் முயற்சித்தால் எதுவும் சாதிக்க முடியும் என்பதை இந்த கார்மென்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றி மூலம் சமுதாயத்துக்கு சொல்லி ஆகணும். அதுக்காவே கடுமையா உழைச்சிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரமே இதை பெரிய நிறுவனமா வளர்த்துக் காட்டுவோம்’’ என்றார்.

 தகவல்: Nagoorkani Kader Mohideen Basha - நன்றி.

Tuesday, November 5, 2013

ஓட்டுநரின் சோர்வை அளந்து அறிவுறுத்தும் கருவி! - தமிழக மாணவர்களின் சாதனை.




திருவள்ளூர்: ஓட்டுநரின் சோர்வை அளந்து, தேவைக்கேற்ப குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுக்கும் கருவி ஒன்றை எஸ். ஏ பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்து உள்ளனர். தூக்கமின்றி தொடர்ந்து வண்டியோட்டுவதால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க உதவும் வகையில் இந்தக் கருவி தொடர்ந்து உணர்வலை(சென்சார்) மூலம் ஓட்டுநரின் அசதி, சோர்வு ஆகியவற்றை மதிப்பிட்டு எச்சரிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ். ஏ பொறியியல் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த வீரராகவபுரத்தில் அமைந்துள்ளது. இக்கல்லூரி மாணவர்களான எஸ்.கார்த்திகேயன், சி.செந்தில் குமார், ஆர்.பிரபாகரன் ஆகியோர் தம் விரிவுரையாளர் ஹெச். அன்வர் பாஷாவின் வழிகாட்டுதலின்படி, இந்த, கண்ணிமை மாறுபாடுகளைக் கொண்டு ஓட்டுனரின் விழிப்புநிலையைக் கண்காணிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இக்கருவி ஓட்டுநரின் கண்ணிமை மாறுபாடுகளைக் கணக்கில் கொண்டு அசதியை அளவிடுகிறது. மேலும், அந்நிலை குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது, வாகனத்திற்குரிய வரின் எண்ணுக்கு குறுஞ்செய்தி யொன்றையும், ஓட்டுநரின் அப்போதைய காணொளி ஒன்றையும் அனுப்பி வைக்கிறது. மேலும் ஜீபீஎஸ் எனப்படும் இடமறிதல் நுட்பம் மூலம் வாகனம் இருக்கும் இடத்தையும் காண்பித்துத் தருகிறது. பின்வருங்காலங்களில் வண்டியின் நிலை, வானிலை, ஓட்டுநரின் உடல்நிலை உள்ளிட்ட மற்றக் காரணிகளும் இதில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மாணவர்களின் இந்த வடிவமைப்பைக் கல்லூரித்தலைவர் டி. துரைசாமி, முதல்வர் சுயம்பழகனார் ஆகியோர் பாராட்டினர்


நன்றி:-· Keyem Dharmalingam

Wednesday, October 30, 2013

பார்வையற்றோர் வெற்றி பெற முடியாதா? - பார்வையற்ற மாற்றுத்திறனாளி திரு. சுப்பிரமணியம்






'Orbit' Subramaniyam

பார்வையற்றவராய் இருப்பினும் வாழ்வில் வெற்றியடைய முடியுமென நிருபித்து, பார்வையற்ற பலருக்கும் பயிற்சி அளித்து, வேலை வழங்கி, தலை நிமிர செய்துக் கொண்டிருக்கிறார், திருச்சியிலுள்ள 'ஆர்பிட்' நிறுவனத்தின் செயலாளராக இருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி  திரு. சுப்பிரமணியம்.

பார்வை இழந்தால், வாழ்க்கையே இருண்டு விட்டதென இடிந்து போய் முடங்கி விடாமல், தன்னம்பிக்கை ஊட்டி, மற்ற சாதாரண மனிதர்களைப்போல, தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு, 1973ல் "ஆர்பிட்"   துவக்கப்பட்டது.

தொடக்கத்தில் ஐந்து (5) பார்வையற்றவர்கள் மூலம், 'சாக்பீஸ்' 'சோப்பு' போன்ற எளிய பொருட்களை மட்டுமே தயாரித்து விற்றோம். பார்வையற்றவர்களால் சரியாக தயாரிக்க முடியாதென எந்த நிறுவனமும் ''ஆடர்களை'' எங்களுக்கு வழங்கவில்லை.

ஆனால், எங்கள் திறமையை உணர்ந்த, திருச்சி  ''பெல்'' நிறுவனம் , கனரக பொருட்களுக்கான ஆடர்களைத் தந்தது. கொடுத்த ஆடர்களை சரியாக முடித்துக் கொடுத்ததால், ஆடர்கள் குவிய ஆரம்பித்தன. 

இதனால், 100 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை தரும் அளவுக்கு வளர்ந்துள்ளோம்.முறையாக பயிற்சிக் கொடுக்கப்பட்டதால், பார்வை உள்ளவர்களை விட, 20 சதவீதம் அதிக திறனுடன் உழைக்க முடிகிறது. காரணம், பார்வையற்றவர்கள் வேடிக்கைப் பார்க்காமல்,  கவன சிதறல் இல்லாமல் பணியாற்ற முடிகிறது.

எங்களது அயராத உழைப்பால், கடந்த 2012ல் ராணிப்பேட்டையிலும் புதிதாக கிளை நிறுவி, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளோம். 

2001 மற்றும் 2009ம் ஆண்டிற்கான "சிறந்த தனியார் நிறுவனம்" என்ற விருதினை தமிழக அரசிடம் பெற்றுள்ளோம். 2010ல் உடல் ஊனமுற்றோர் தினத்தன்று, ''சிறந்த நிறுவனம்'' என்ற விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றோம். தைவானில், 2012ம் ஆண்டு, 23 நாடுகள் பங்கேற்ற 'வொர்க்கபிலிட்டி ஆசியா' மாநாட்டில், மாற்றுத்திறனாளிகளுக்காக இயங்கும், 200 நிறுவனங்கள் பங்கேற்றதில், எங்கள் நிறுவனம் சிறந்த நிறுவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாராட்டப்பெற்றோம்.

தன்னம்பிக்கையுடைய பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக திகழ்வதுடன், மற்ற பார்வையற்றவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, பயிற்சி கொடுத்து, வளர்ந்தது விடும் அவரையும், அவர் நிறுவனத்தையும், மென்மேலும் வளர்ந்து சிறப்படைய வாழ்த்துவோம் நண்பர்களே.  

Thursday, October 24, 2013

குளுமையாக இருக்கிறது

வாவ்.... இங்கு இப்போது காற்று வீசாமல் மழை பெய்துக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு இருபது நிமிடம் காரில் கூட பயணிக்க முடியாத அளவு பலத்த மழை. ஒரு கார் தொடர்ந்து செல்லமுடியாமல் எங்கள் வீட்டருகே நிறுத்தி வைத்து, மழை குறைந்தபின் இப்பொழுதுதான் செல்கிறார்கள். குளுமையாக இருக்கிறது. இனிய மாலை வணக்கம் நட்புகளே.

Friday, October 18, 2013

பாரத நாட்டியத்தில் முஸ்லிம் பெண்- பாகிஸ்தானில் அரங்கேற்றம்

.

தாலிபான் பயங்கரவாத அமைப்பு, கலைகளுக்கு தடை விதித்ததால், அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான பாகிஸ்தானிய மக்கள், கலைகளை கற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர்.
அம்னா மவாஸ் என்னும் இளம் பெண் வீட்டுக்கருகே, இந்தியாவை சேர்ந்த இந்துசட்டர்ஜி   என்பவர், பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொண்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்  குடியேறினார். அவர் பரத நாட்டியம் அறிந்தவர். ஆதலால் அவரிடம் அம்னா மவாஸ் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள விரும்பி 20 பேர் கொண்ட பெண்கள் குழுவுடன் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

அம்னா மவாஸ் மட்டுமே முறையாக பரத நாட்டியத்தை கற்க, மற்றவர்கள், இடையிலேயே தங்கள் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயந்து நின்று விட்டனர். இந்நிலையில் பல தடைகளையும், சர்ச்சைகளையும்  கடந்து, கணவரின் ஆதரவுடன் 14 ஆண்டுகளாக பரதத்தை விடாமல் கற்று, இஸ்லாமாபாத்தில் உள்ள குச் காஸ் என்ற இடத்தில் "எல்லோருக்கும் பாகிஸ்தான்" என்ற தலைப்பில் பாரத நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதற்கு அம்னா மவாஸ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவர் வாக்கஸ் காலித்தின் ஒத்துழைப்பால், பாகிஸ்தானின் முன்னணி பாடகர் தைமூர் ரஹ்மான் இன்னிசை பாட, அம்னா மவாஸ் நடன மாட, ஹிந்துஸ்தானி ராகத்தில் பரதத்தை ஒலிக்கவும், ஒளிரவும் செய்துள்ளார். அதைக் கண்ட பாகிஸ்தானிய மக்கள் பிரமிப்பில் ஆழ்ந்து அனுபவித்தனர்.

** கல்வி புரட்சி பெண் மலாலாவுக்கு ஏற்பட்ட நிலை, இவருக்கும் வந்து விடக் கூடாது என பிரார்த்தித்துக் கொள்வோம்.  

வாழை தோப்பை காக்க..., வாழ்த்துவோம் நண்பர்களே!,



வாழை சாகுபடியில் நீர் தட்டுபாடு, நோய் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பைவிட இருக்கும் பெரும் சவால், வேகமான காற்றிலிருந்து வாழை மரங்களை காப்பதுதான். இதில்தான் விவசாயிகளுக்கு பெருத்த நட்டம் ஏற்படும்.

பருவக்காற்று வீசும் காலங்களில் கம்புகளால் முட்டுக் கொடுப்பது, மண் அணைப்பது, இலைகளை கவாத்து செய்வது, 'பிளாஸ்டிக் பெல்ட்'டால் கட்டுவது போன்றவற்றை செய்து வாழை மரங்களைக் காப்பது வழக்கம். இருப்பினும் 70 கி.மீ., வேகத்தில் காற்று வீசினால் மரங்கள் அடியோடு சாய்ந்து விடும். 

கடலோர பகுதிகளில் வீசும் காற்றைத் தடுக்கவும், கல் அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புழுதியை தடுக்கவும் பொதுவாக சவுக்கு மரங்களை வளர்ப்பர். அதேமுறைப்படி வாழை மரத்தோப்புகளையும் காக்க எண்ணியே, வீரிய ரக சவுக்கு மரத்தை உருவாக்கியுள்ளார், கோவையில் உள்ள, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு ஆராய்ச்சியாளர் . புவனேஸ்வரன்.

வீரிய ரக சவுக்கு:

10க்கு மேற்பட்ட உயர் ரக சவுக்கு மரங்களிலிருந்து, மாதிரிகள் எடுக்கப்பட்டு, 'குளோனிங்' முறையில் தாவர இனப்பெருக்கம் முறையில், "காசுரினா ஜூங்குனியானா" என்ற வீரிய ரக சவுக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பயன், பயன்படுத்தும் முறை:

இந்த ரக சவுக்கை வாழைத்தோப்பின் நான்கு திசைகளின் ஓரத்திலும் மூன்று வரிசைகளாக ஒரு மீட்டர் இடைவெளியில் குறுக்கு மறுக்காக நட வேண்டும். இச்சவுக்கை வளர்ப்பதால், காற்றின் வேகத்தை 46 சதவீதமும், மண் அரிப்பை 76 சதவீதமும் கட்டுப்படுத்தலாம். மேலும் தோட்டத்தி தட்பவெப்ப நிலை சமன் ஆவதுடன், காற்றில் உள்ள தழைச்சத்தையும் மண்ணில் நிலைநிறுத்துகிறது. இச்சவுக்கு மரம் மூன்று ஆண்டுகளுக்கு பயன்படும். பின் சவுக்கு மரங்களை அறுவடை செய்வதின் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.

தொடர்பு கொள்ள: 0422 - 2484100

**வாழைத்தோப்புகளைக் காக்க, வீரிய ரக சவுக்கு மரங்களைக் கண்டு பிடித்த மர ஆராய்ச்சியாளர் புவனேஸ்வரன் அவர்களை வாழ்த்துவோம், நண்பர்களே.


Monday, September 16, 2013

மாற்றுத்திறனாளிகளுக்கு - சேலம் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டி



உடற்குறை மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காது கேளாதோருக்காக மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் 14/9/13 சனிக்கிழமை சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விழாவை சேலம் மாவட்ட மாற்றுத்திறன் படைத்தோர் நல்வாழ்வு சங்க தலைவரும், எமது நண்பருமான அத்தியண்ணா துவைக்கி வைத்தார்.

1) கை, கால் ஊனமுற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், மினி கூடைப்பந்து எறிதல்,

2) மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல்.

3) பார்வையற்றோருக்கு = 50மீ, 100மீ ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். டென்னிஸ் பந்து எறிதல்.

4) காது கேளாதோருக்கு = 100மீ, 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல். ஈட்டி எறிதல்.
போன்ற போட்டிகளில் 130 மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர் பங்கேற்றனர். மாலையில் மாவட்ட விளையாட்டு அலுவலர் வரவேற்க, பிரகாசம் வெற்றிப்பெற்றவர்களுக்கு சேலம் சென்ட்ரல் இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் கல்பனா இன்பராஜ் பரிசுகள் வழங்க, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் நடராஜன், சேலம் ஜேசிஐ நாச்சிமுத்து ராஜா, விஜயகுமார் மற்றும் பலர் பங்கேற்க, சேலம் ஜிம்னாஸ்டிக் பயிற்றுனர் ஜெயமோகன் நன்றி கூறினார்.

வெற்றிப் பெற்றவர்களை ஊக்குவிக்க வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

பாராட்டு விழா- பார்வையற்ற மாணவர்களுக்கு.



நாமும் வாழ்த்துவோம். சேலம் பார்வையற்றோர் அரசு நடுநிலைப்பள்ளியில், சங்க ஆண்டு விழா, ஆசிரியர் தின விழா, பத்தாம் வகுப்பு, பிளாஸ் 2 பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாழ்வு அலுவலர் குத்து விளக்கேற்ற,  அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன் பரிசு வழங்க, சேலம் பார்வையற்ற ஆசிரியர் சங்க மேற்கு மண்டல கிளை செயலாளர் வரவேற்க, மேற்கு மண்டல கிளை தலைவர் செல்வராஜ் தலைமையில் சங்க மாநில தலைவர் விஜயகுமார், மதுரை கிளை சங்க செயற்குழு உறுப்பினர் நாகராஜன், கடலூர், விழுப்புரம் கிளை சங்க செயலாளர் கோபால் உள்பட பலர் பேச விழா முடிந்திருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று  பரிசு பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ மாணவியரை வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்.


* பார்வையற்றோர் சங்க நிர்வாகிகளின் பெயர்களை ஏன் விரிவாக வெளியிட்டிருக்கிறோம் என்ற நினைவு உங்களுக்கு தோன்றக்கூடும். பார்வை குறைப்பாடு இருந்தும்,  மற்றவர்களை விட திறமையில் உயர்வாக, சங்கங்களை நிர்வாகிக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கும் அவர்களை நாம் வாழ்த்துவதின் மூலம், மற்றவர்கள் அனைவருக்கும் ஊக்க தருவதாக அமையுமென கருதுகிறோம். இப்பதிவை அவர்கள் வாசிக்கக்கூடிய நிலையில்லாவிடினும், அவர்களின் உற்றார், உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் மூலமாக இச்செய்தியையும், உங்கள் வாழ்த்துக்களையும் செவிமடுக்க நேர்ந்தால், எவ்வளவு மகிழ்வடைவார்கள் என்பதை, சிறிது நேரம் விழிகளை மூடி, சிந்தித்துப் பாருங்கள்.








Tuesday, September 3, 2013

மாணவி சுஷ்மாவை வாழ்த்துவோம்!!!



ஏழு வயதில் ,உயர்நிலைக் கல்வி முடித்து, 13 வயதில் உத்திரபிரதேச மாநிலம், லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., படிப்புக்கு மாணவர் சேர்க்கையைப் பெற்றுக் கொண்டு, கூலித் தொழிலாளியான தந்தை பகதூர் வர்மாவுடன் வெளியே வந்த சுஷ்மா வர்மா.

#  இவருடைய முயற்சியும், அறிவுக்கூர்மையும் இந்திய மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கட்டும்.

# மாணவி சுஷ்மா வர்மா கல்வி, கேள்விகளிலும், செயல்களிலும் சிறந்து, வாழ்வில் பெரும் புகழடைய வாழ்த்துவோம் நண்பர்களே. 

Photo: மாணவி சுஷ்மாவை வாழ்த்துவோம்!!!

ஏழு வயதில் ,உயர்நிலைக் கல்வி முடித்து, 13 வயதில் உத்திரபிரதேச மாநிலம், லக்னோ பல்கலையில் எம்.எஸ்சி., படிப்புக்கு மாணவர் சேர்க்கையைப் பெற்றுக் கொண்டு, கூலித் தொழிலாளியான தந்தை பகதூர் வர்மாவுடன் வெளியே வந்த சுஷ்மா வர்மா.

#  இவருடைய முயற்சியும், அறிவுக்கூர்மையும் இந்திய மாணவ மாணவியருக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகத்தை அளிக்கட்டும்.

# மாணவி சுஷ்மா வர்மா கல்வி, கேள்விகளிலும், செயல்களிலும் சிறந்து, வாழ்வில் பெரும் புகழடைய வாழ்த்துவோம் நண்பர்களே.

Monday, September 2, 2013

அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"



அறிவுக்கண் திறக்க அறிய சேவையாற்றி வரும் கோவை "ஸ்ரீ விஜயலட்சுமி பொதுநல அறக்கட்டளை"க்கு வாழ்க, வளரட்டும் தங்கள் சேவையென, எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . 

https://www.facebook.com/photo.php?fbid=677371472276178&set=a.251710784842251.89114.100000099950772&type=1&theater



aambalmalar.blogspot.in/2013/07/blog-post_10.html

Thursday, August 22, 2013

தூங்காதே தம்பி தூங்காதே !!!


கார் ஓட்டுபவர்கள் தூங்கி விடாமல் தடுத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருவியை, ஜெர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளார்கள். இந்த கருவியில் உள்ள கேமரா, ஓட்டுனரின் கண் அசைவுகளை வினாடிக்கு 200 முறை படம் பிடிக்கும் சக்திக் கொண்டது. எனவே இக்கருவியின் கணிப்பு துல்லியமானதாகவே இருக்கும். இந்த கருவிக்கு "ஐ டிராக்கர் " என பெயரிடப்பட்டுள்ளது.

எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்கும், இக்கருவி ஓட்டுனர் தூங்குவது போல் தெரிந்தால், விழிப்புணர்வு அலாராமாகவோ, விளக்காகவோ இருக்கலாம்.அடுத்தடுத்து வரும் வாகனங்களுக்கும் இதனால் எச்சரிக்கை பெரும் வகையாகவும் இருக்கும். காரில் தூக்கக்கலக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக அமையுமென அவ்விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


# எச்சரிக்கை விளக்குடன் அலாரமும் இணைந்திருந்தால் மேலும் அதிக பாதுகாப்பைத்தரும். கண்டுபிடித்துள்ள ஜெர்மனி விஞ்ஞானிகளை வாழ்த்துவோம்.

இன்றொரு தகவல் ! - திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram )




தமிழ்நாடு பழனியை சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையும், வானவியல் ஆய்வாளரும், எமது முகநூல் நண்பியுமான திருமதி.மோஹனாம்மா ( Mohana Somasundram ) அவர்களைப் பற்றி டாக்டர் விகடன் இதழிலும், காலைக்கதிர் நாளிதழிலும் செய்தி வாசித்ததும், அவருடனான சந்திப்பு நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ள தொடர்புக் கொண்டோம். அவரும் மிக்க மகிழ்வுடன் அளவுலாவினார். அவர் நலனும், பணியும் சிறக்க வாழ்த்துக் கூறி விடைப் பெற்றோம்.

Wednesday, August 21, 2013

வாழ்த்துவோம் !!!



பட்டதாரிகளுக்கான பி.எட்., தகுதித் தேர்வு ஆகஸ்ட் 18ந் நடந்தது. அதில் சேலம் கண்ணங்குறிச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சரண்யா,
சென்ற முறை 84% மதிப்பெண்கள் பெற்றிருந்தபோதும் பணி கிடைக்காமையால், இம்முறை உயர்ந்த மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர் பணியை பெறும் குறிக்கோளுடன் இரண்டாம் முறையாக தேர்வு எழுதியுள்ளார்.


விடாமுயற்சியுடன் போட்டித்தேர்வை எழுதியுள்ள மாற்றுத்திறனாளி சரண்யாவின் கனவு நினைவாகி சாதனைப் படைக்க வாழ்த்துவோம் நண்பர்களே.


Tuesday, August 20, 2013

பரந்த மனம் இவருக்கு - பேராசிரியர் பெரியார் தாசன்










சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராசிரியர் பெரியார் தாசன் நேற்று (19/08/2013 ) இறைவனடி அடைந்து விட்டார். அவருடைய விருப்பப்படி, அவருடைய கண்கள் சங்கர  நேந்திராலயாவுக்கும், உடல் சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் தானமாக வழக்கப்பட்டது.

அவரின் உயர்ந்த எண்ணத்திற்கு தலை வணங்கி, ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம். 
 







தள்ளாத வயதிலும் ஒரு சாதனை.



சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 25 ஆண்டுகளாக காது மூக்குத் தொண்டை நிபுணராக பணியாற்றிவரும் 88 வயதான டாக்டர் ராமதாஸ், இன்று சென்னை பல்கலையில் நடக்கும் பட்டமளிப்பு  விழாவில் காஎன்னை து மூக்குத் தொண்டை சிறப்பு மருத்துவத்திற்கான பட்டத்தைப் பெறுகிறார்.

ஆந்திராவில் பிறந்த டாக்டர் ராமதாஸ், 1953ல் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., பட்டமும், தொடர்ந்து காது மூக்குத் தொண்டை அறுவை சிகிச்சைத் துறையில் முதுகலைப் பட்டமும், இப்பிரிவிலேயே பட்டய படிப்பும் முடித்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் காது மூக்குத் தொண்டை பிரிவில் பணியாற்றியதுடன், அத்துறையின் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

வயதிலும், படிப்பிலும், பணியிலும் உயர்நிளையிலுள்ள டாக்டர் ராமதாஸ் நீண்ட ஆயுளுடன் நிலையான நலனுடனிருந்து பணி மென்மேலும் சிறந்து நீங்கா புகழடைய, நமது சார்பில் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வோம்.

Tuesday, August 13, 2013

மூளைக்கு வேலை



சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அவரவருக்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிர்கள் விளையாட்டு போல மூளைக்கு வேலைக் கொடுத்து உற்சாகப்படுத்தும் முறையில் கணித ஆசிரியையாக பணியாற்றிய திருமதி சீதாலக்ஷ்மி அவர்கள் எளிதான வகையில் கீழ்காணும் இலவச இணையதளத்தை துவக்கியுள்ளார்.

இவர் பணியைப் பாராட்டும் விதமாக 'அமெரிக்கன் லைப்ரரி அசோசியேசன்' விருது வழங்கப்பட்டுள்ளது.

வலைதளத்திற்குக் கிடைத்த விருதுகளும் அங்கீகாரமும் :

அமெரிக்கநூலக விருதினையும், ஆஸ்திரேலிய கல்வித்துறையின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

http://www.gymnasiumforbrain.com/ala.htm

http://www.gymnasiumforbrain.com/edna.htm

மேலும் Education world என்ற வலைத்தளம் இத்தளத்திற்கு "A+" விருதினை வழங்கியுள்ளது. http://www.gymnasiumforbrain.com/educationworld.htm


இந்த இணையதளம் தமிழிலும் பார்வையிடும் வசதியுள்ளது. அவர் செயல்பாடுகள் மேலும் சிறந்து, புகழடைய வாழ்த்துவோம்.

In English: www.gymnasiumforbrain.com/english/ - இதன் மூலமாகவே தமிழுக்குறிய வாய்ப்பு உள்ளது.

தமிழில்: www.gymnasiumforbrain.com/tamil/

Dhavappudhalvan

Thursday, August 8, 2013

மனிதத் தேனி


வாழ்த்துவோமே "மனிதத் தேனி' சாந்தி சுப்பிரமணியம்" அவர்களை!!!!!!!
ஊக்கம் கொள்வோமே இவரைக் கண்டு....


திருமதி சாந்தி சுப்பிரமணியம் மற்றும் அவரது மாணவர் வேல்முருகன்

கிருஷ்ணகிரியில் இருந்து, வெறும் +2 முடித்த கையோடு, திருமணமாகி வந்தவர் சாந்தி சுப்ரமணியம்.
ஆலம் விதையாய் திருமண பந்தம் எனும் புதிய உலகத்துக்கு அடி எடுத்து வைத்தவர், இன்று விருட்சமாகி பல கண் தெரியாத மாணவர்களின் படிப்புக்கு, பேருதவிகளை செய்து அவர்களாலேயே இன்று 'மனிதத் தேனி' என்று புகழப்பட்டு வருகிறார்.

தற்போது சாந்தி சுப்ரமணியத்தின் உதவியோடு பி எட், மற்றும் மற்ற பட்டப்படிப்புகள் படித்துவிட்டு, வேலை பார்க்கும் கண் தெரியாதவர்கள் பல பேர். வெறும் +2 படித்து விட்டு உங்களால் இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது,

"+2 படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது, பிறகு கணவர், குழந்தைகள் என்று எனக்கு நேரம் சரியாக இருந்தது. எனக்கு டாக்டராக வேண்டும் என்று கனவு இருந்தது. அந்த கனவு சிதைந்து போனாலும், குடும்ப   வாழ்வில் நான் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன். பிள்ளைகள் ஓரளவுக்கு வளர்ந்தவுடன், எனது நேரத்தை பயனுள்ளதாக செலவிட வேண்டும் என்று தோன்றி, மேற்கொண்டு படிக்க  முடிவு செய்தேன்" என்று கூறும் சாந்தி சுப்ரமணியம் படித்துப் பெற்று இருக்கும் பட்டங்கள் எத்தனை தெரியுமா?

எம்.காம், பி.எட், எம்.பில், பி.ஏ ஆங்கிலம், பி.ஜி.டிப்ளமோ இன் கைடன்ஸ் அன்ட் கவுன்சிலிங் என நீண்டு கொண்டு போகிறது. சரி, இத்தனை பட்டங்கள் பெற மொட்டிவேஷனாக அமைந்தது எது என்று இவரிடம் கேட்டால்..

"2000ம் ஆண்டு, எனக்கு ஒரு தோழி ரெகமண்ட் செய்தார்கள், அதாவது கண் தெரியாத மாணவர்கள் நிறைய பேர்  இருக்கிறார்கள். அவர்களுக்கு உன்னால் முடிந்த பாடங்களை வாசித்து காண்பித்து, தேவைப்பட்டால் ரெக்கார்ட் செய்து கொடு என்று அறிவுறுத்தினார்கள். அங்கு சென்ற பின்னர் நான் ஒரு புதிய உலகத்தைக் கண்டேன். அந்த பிரமிப்பில் நான் அடிக்கடி  அவர்களுடன் நேரத்தை கழிக்க ஆர்வமுடன் செல்வேன்.

அது அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்ததா  என்பதைவிட, நான் அவர்களிடம் கண்ட ஆற்றலும், ஊக்கம் மிகுந்த இந்த தனி உலகமும் எனக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது.  நான் இவர்களை ஊக்குவித்து படிக்க சொல்வதும், அவர்கள் என்னை ஊக்குவித்து மேலும் மேலும் படிக்கத் தூண்டியதும் ஒரு தனி சுகமான அனுபவங்கள்.

நான் கரஸில் படித்து இப்படி அதிக பட்டங்கள் வாங்கியதில் அவர்களுக்கு அதிக பங்கு உண்டு. ஒரு கண் தெரியாதவருக்கு உதவி  செய்தேன், அவர்கள் பயனடைந்தார்கள் என பல பேர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் அவர்களால் நாமும் பயனடைகிறோம் என்பதற்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது எனக்கு பெருமையாகவும் இருக்கிறது.

எனது ஜாதக யோகம் எனக்கு வேலைக்குப் போகும் தருணமே வாய்க்காதாம். ஆனால், எனக்கும் நான் படித்த படிப்பினால் எடுத்த எடுப்பில் வேலை கிடைத்தது. அதுவும் கல்லூரிப் பேராசிரியராக! என் பிள்ளைகள் சொல்வார்கள்.  'என்னம்மா, காலேஜ் என்றால் ஜாலியா சினிமாவில் காண்பது போல இருக்கும் என்று நினைத்தால்,  நோட்ஸ், ப்ராஜக்ட் என்று வதைக்கிறார்கள்' என்று.

'ஆனால், படிக்க கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்காத நான், பேராசிரியராக அன்று கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்த நாள் இருக்கிறேதே. அடடா என்ன சுக அனுபவம் தெரியுமா! நான்  என் பிள்ளைகளிடம் சொன்னேன், நான்  போனதுதான் உண்மையில் சினிமா காலேஜ் என்று, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. கல்லூரிக்கு  சென்று படிக்காத நான் கல்லூரி பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க போகிறேன்...எவ்வளவு இனிமையான அனுபவம் பாருங்கள்!'

'இந்த நிலைக்கு நான் வர காரணம் என்ன? ஒரு நாள் ஒரு கண் தெரியாத மாணவரிடம் என்னுடன் வந்து இருந்த ஒரு பெண்மணி கேட்டார். தம்பி, நீ என்னவாகப் போகிறாய் என்று. அதற்கு அந்த மாணவர் நான் ஐ ஏ எஸ் ஆகணும் மேடம் என்றார். கண் தெரியாத உன்னால் எந்த அளவுக்கு படித்து ஐ ஏ எஸ் ஆக முடியும் என்று நினைக்கிறாய் என்று அந்த பெண்மணி கேட்டார்.'

'அதற்கு அந்த மாணவர் சொல்லிய பதில்தான் என்னை இத்தனை பட்டங்கள் வாங்கத் தூண்டியது. அந்த மாணவர், உங்களுக்கும், எங்களுக்கும்  என்ன பெரிய வித்தியாம் மேடம்? நீங்கள் பார்த்து படிப்பதை நாங்கள் கேட்டு படிக்கிறோம். அவ்வளவுதானே? எங்களால் ஏன் ஐ ஏ எஸ் ஆக முடியாது என்று கேட்டார். எனக்கு அப்படியே புல்லரித்துப் போனது. அவர்களிடம் இப்படி நான் நிறைய கற்றுக் கொண்டதன் விளைவே, இப்போது நான் படித்து வாங்கிய பட்டங்கள்.'

என்னை, இந்த கண் தெரியாத மாணவர்கள் நன்றாக  ஊக்குவிப்பார்கள். அவர்கள்தான், தமிழக அரசின் ஆசியர் தகுதித்  தேர்வு எழுத சொல்லி என்னை ஊக்கப்படுத்தினார்கள். அப்போதுதான் ஆசிரியர் தகுதிக்கான முதல் தகுதித் தேர்வு ஆரம்பமானது. நான் இந்த மாணவர்களிடம் குரூப் ஸ்டடி  செய்து பாஸ் பண்ணி, இப்போது அம்பத்தூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் +1,+2 வகுப்பு எடுக்கிறேன். எங்கள் வீட்டில் நான் எனது பிள்ளைகள் தினேஷ் குமார், விக்னேஷ் குமார், என்று மூவரும் படித்தோம். எனக்குத்தான் முதலில் வேலை கிடைத்தது. அடுத்து எனது பிள்ளைகள் இருவருக்கும் வேலை கிடைத்தது.

இது போன்ற வித்தியாசமான மகிழ்வான தருணங்கள் எத்தனை குடும்பத்தில் நடக்கும்? இந்த வித்தியாசமான அனுபவங்கள் கிடைக்க காரணமாக இருந்தது, நான் கண் தெரியாத மாணவர்களுடன் பழக ஆரம்பித்த போதுதான். உண்மையில் அவர்களுக்கு நான் என்ன கற்றுக் கொடுத்தேன் என்று தெரியாது. அவர்களிடம் நான்  நிறைய கற்றுக் கொண்டு முன்னேறியுள்ளேன்." என்று மீண்டும் மீண்டும் பெருமையுடன் சொல்கிறார் சாந்தி சுப்ரமணியம்.

அவர் வீட்டுக்கு அவரைக் காண சென்ற போது, வந்திருந்த கண் தெரியாத மாணவர் வேல்முருகன், "சாந்தி சுப்ரமணியம் மேடம் இல்லை என்றால், நான் இந்த அளவுக்கு படித்திருக்க முடியாது. இப்போது எஸ் ஆர் எம் கல்லூரியில் இலவசமாக பி எட் படிக்க சீட் கிடைத்துள்ளது. இதற்கும் எனக்கு படிக்க, சாட் வரைய மேடம்தான் உதவி செய்வார்கள். மேடம் அத்தனை சுறுசுறுப்பு. நாங்கள் 'மனிதத் தேனி' என்று பெயர் வைத்துள்ளோம். மேடம் படிப்பில் மட்டுமல்லாது, என்னுடைய கபடி விளையாட்டு, ஓவியம் வரையும் திறமை அனைத்தையும் ஒரு அம்மா மாதிரி இருந்து ஊக்குவிப்பார்கள்" என்று நெகிழ்வுடன் கூறுகிறார்.
- 4தமிழ்மீடியாவுக்காக எழில்செல்வி, படங்கள் சூர்யா
 எழில் செல்வியின் இக்கட்டுரைகளையும் வாசித்துச் செல்க :



http://www.4tamilmedia.com/knowledge/essays/16089-2013-08-01-09-53-21


Thanks to:  4தமிழ்மீடியா

Wednesday, August 7, 2013

இன்றொரு தகவல் - சொல்வோம் வாழ்த்துக்களை.



.Mrs.vijayalakshmi  madurai




14 மாஸ்டர் டிகிரி, முன்று எம்.பில்., இரண்டு பி.ஹெச்டி. பெற்றதுடன், 64 சாஃப்ட்வேர்களை தயாரித்த, மதுரையின் முதல் பெண் கணினி மென்பொருள் ஏற்றுமதியாலரான திருமதி. விஜயலட்சுமி அவர்களை முதலில் வாழ்த்துவோம்.

காதல் கணவரை 25 வயதிலேயே கணவரை இழந்தபோது கம்பியூட்டர் இன்ஜினியரிங் படித்திருந்ததால், தனது குழந்தைகளுக்காக தற்கொலை முடிவை கைவிட்டு, வங்கியில் 25 இலட்சம் ரூபாய் கடன் பெற்று, 12 ஊழியர்களுடன் வீட்டிலேயே, சிறிய சாஃப்ட்வேர் நிறுவனத்தை ஆரம்பித்தவர், கடுமையான உழைப்பினால் இன்று 400 ஊழியர்களுடன் மதுரை, டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத் என நான்கு கிளைகளாக வளர்ந்துள்ளது.

கிராமத்து இன்ஜினியரிங் மாணவர்கள் கணினி தொடர்பாக படித்திருந்ததாலும், தொழில் ரீதியான திறனை வளர்த்துக் கொள்ளாததால், படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தடுமாறுகின்றனர். எனவே நான் பெற்ற நன்மைகளுக்கு பிரதிபலனாக, "வெப்டெவலெப்பிங்" பயிற்சியை இலவசமாக கற்று   தந்து, 'மைக்ரோசாஃப்ட்' துணையுடன் 'ஆன்-லைன்' தேர்வு நடத்துகிறேன்.

இத்தேர்வு முடிவுகள், மைக்ரோசாஃப்டின் இணையதளத்திலேயே வெளிவருவதால், வென்றவர்களுக்கு உலகின் முக்கிய எம்.என்.சி.,கம்பெனிகளிலேயே இலட்ச கணக்கில் சம்பாரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. வெளியிடங்களில் இப்பயிற்சிக்கு ஒரு இலட்சம் ரூபாய் வசூலிக்கின்றனர். இங்கு இலவசமாகவே.

ஆண்டுக்கு 200 கிராம  மாணவர்கள் வீதம், இரண்டு ஆண்டுகளாக பயிற்சி அளிக்கிறேன்.இதுவரை யாரும் தோல்வி அடையவில்லை. மேலும் விதவை பெண்களுக்கு கணினி பயிற்சி, டெக்னிகல் டிரைனிங், மன உறுதியை வளர்க்க கவுன்சலிங் போன்றவற்றை வழங்கி வழிக்காட்டுகிறேன்.

சாஃப்ட்வேர் துறையில் வெற்றி பெற்றமைக்காக, சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதை, மத்திய, மாநில அரசுகளிடமிருந்தும், இங்கிலாந்தின் 'விமன் ஆஃப் தி இயர்' விருதும் பெற்றிருக்கிறேன் என தெரிவித்திருக்கும் திருமதி.விஜயலட்சுமி அவர்களை மீண்டும் வாழ்த்துவோம்.

தொடர்புக்கு : 98421 74800

Monday, August 5, 2013

மாற்றுத்திறனாளி பெண், உலக செஸ் சாம்பியனை வாழ்த்துவோம்.



உலக பெண்கள் தனி நபர் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில், இந்தியாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஜெனிதா அந்தோ சாம்பியன் பட்டம் வென்றதற்காக, இந்திய அரசின் சார்பில் பாராளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலாளர்கள், தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் எமது சார்பிலும், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.

* எந்த வருடத்தில், எங்கே, வெற்றிப் பெற்றார் என்பதோ, அவரின் புகைப்படமோ கிடைக்கவில்லை. அறியும் நண்பர்கள் எமக்கு தகவல் கொடுத்துதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Saturday, July 20, 2013

அங்கத்திலே குறையிருந்தாலும் ........

அபூர்வமான இந்த புகைபடத்தில் இருப்பவர்கள் தாய் தந்தை , இரு பிள்ளைகள் உடன் ...!!

வார்த்தைகளில்லை உணர்வுகளைப் பதிக்க. அக்குடும்பம் நலமாக மகிழ்வாக வாழ பிரார்த்திக்கிறோம்.



https://www.facebook.com/photo.php?fbid=554474407949764&set=a.180792061984669.46925.100001616302230&type=1&theater

Monday, July 15, 2013

ஆனந்தம் - இன்றொரு தகவல்.


நேற்று ஒரு இடத்திற்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பும்போது, ஒரு சாலை சந்திப்பில் சிக்னலில் நின்றுக் கொண்டிருந்தோம். அப்போது திடிரென்று ஒருவர் சாலையைக் கடந்து, ஐயா நலமா என கேட்டார். சில நொடிகளில் அவரை நினைவிற்கு கொண்டு வந்து, இப்பொழுது தான் நீங்கள் நல்ல தோற்றத்துடன் இருக்கிறீர்கள் என்றேன்.

அவரும்,, தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. குடியை நிறுத்தி விட்டேன் என்றார். சிக்னல் கிடைக்க மீண்டும் பார்ப்போமென மகிழ்வுடன் விடைப்பெற்று கொண்டோம். நினைவுகள் பின்னோக்கி ஓடியது. யான் எப்பொழுதும் தனியாக வண்டியில் பயணம் செய்யும் போதும் (அவசிய பணிகள் இல்லாத சமயங்களில்) பேருந்துக்காக தனியாக காத்திருக்கும் நபர்களை, யான் செல்லவிருக்கும் இடத்திற்கு இடைப்பட்ட இடமாக இருப்பின் இலவசமாக அழைத்து சென்று உதவுவது என குறிக்கோளாக செயல்பட்டு வருகிறோம். அதுபோல சில மாதங்களுக்கு முன் இவரையும் இப்படி அழைத்து சென்றோம். அழுக்கு உடையுடனும், போதையிலும் இருந்தார்.

அவர் கீழே விழுந்து விடுவாரோ என்ற நினைப்பிலும், அவரிடம் பேசவும் மெதுவாக வண்டியை இயக்கியபடி பேச்சுக் கொடுத்து, அவர் கட்டிட மேஸ்திரி என்பதையும், வீடு இல்லா நிலையையும் குடும்ப சூழ்நிலையையும் அறிந்துக் கொண்டோம். குடியை நிறுத்த வேண்டிய அவசியத்தையும், பணியில் அவரைப் போன்றவர்களின் செயல்பாடுகளையும் விளக்கி, மீண்டும் எம்மை எங்கு சந்தித்தாலும் நீங்களாக பேசுங்கள் என அறிவுரைக் கூறி அனுப்பினேன்.

நேற்று எம்மை, எதிர்பாராத வகையில் மீண்டும் அவராக வந்து சாலை சந்திப்பில் பேசியதுடன், போதையில் இல்லாமலும், நல்ல உடையுடன் காண நேர்ந்ததும், எமது பிரச்சாரத்தினால் இவரை போதைப் பிடியிலிருந்து மீட்க முடிந்ததே என்ற மகிழ்வுடன் ஒரு உத்வேகமும் ஏற்பட்டது.


# # குடி குடும்பத்தை அழிப்பதுடன், உங்கள் கௌரவத்தையும் (மரியாதையையும்) அழித்து விடும்.


இனிய மாலை வணக்கம் நண்பர்களே!




Vijayakumaar Chandrasekar சிறப்பான வெற்றியடைய வாழ்த்துவோம் நண்பர்களே!

near Chennai, Tamil Nadu ·


https://www.facebook.com/mylswamy.annadurai/posts/542274662500441?comment_id=4941518&offset=0&total_comments=8&notif_t=share_reply
  • Dear Sir,
    This letter is from a great fan of yours to seek your help and blessings towards winning a youth competition at global level.
    My name is Vijayakumaar. I was born in a small town ‘Aruppukottai’ near Madurai. I am doing my final year Mechanical Engineering from SSN College of Engineering, Chennai. From my childhood I was inclined towards social service. Now, I am competing for the position of Global Ambassador of “World Merit”.
    World Merit is a global network of more than 1,00,000 aspiring young leaders. Through their programs, they bring people together for a purpose - a purpose of social change, a purpose of building their potential. For more information, visit http://www.worldmerit.org/. World Merit has a scheme of selecting youth with potential to excel and groom them for enhancing their potential. It is called ‘Your Big Year' competition. I have just crossed the first stage, being one among the 120 persons selected out of more than 55,000 participants from nearly 200 countries. I am the only one selected from our Tamil Nadu and one among the 12 from India.
    To move forward, I need to interview a person whom I admire the most and who have done an extraordinary contribution in their field of work. In that respect, I am approaching you to give me some time for a discussion.
    You are a great inspiration for Indian Youth. You are making our country proud. You have taught us that the ‘Moon is at our reach’. You are such a simple person that anyone can approach you through Facebook. I am reaching out to you because I admire the work you do in our country and I would love to interview you on your experiences and let the world know about your achievements, in particular the pivotal moment in your life that defined the trajectory of your career.
    Thank you for taking the time to read this letter. The prospect of potentially interviewing you is very exciting. Please feel free to email me your concerns and/or questions at scvijayakumaar@ymail.com.
    I look forward to hearing from you.
    I assure you that I will never use the recorded interview for any purpose without your prior permission other than the competition in which I am participating. This task is mainly to test my interviewing skills as I have to interview many world leaders in the future as the ambassador of World Merit. I can represent our country in the ‘Global Entrepreneurship Week’ which is to be held on UK this November, if I win this competition. Making this year a big year for me and making our country proud is in your hands. So, please do reply at the earliest.
    Sincerely Yours,
    S.C.VIJAYAKUMAAR.
    • You, Mylswamy Annadurai and 2 others like this.
    • Mylswamy Annadurai I have briefly seen the link you have referred. Looks a good initiative. I can help you as requested. I am visiting your college on 9th Aug, can you wait until then. Alternatively we can our interview through Gmail Hangout and have a final round on 9th Aug.
    • Mylswamy Annadurai A word of caution , let this won't distract your studies. Think twice before proceeding.
    • Vijayakumaar Chandrasekar Hello sir...Thanks for the reply.....The deadline is july 31st..so,I can't wait till august....If you have any appointments in chennai this month,I can meet you there...........

    • Vijayakumaar Chandrasekar Also, thanks for the advice sir...I have to be careful on my studies.....but this is once in a lifetime opportunity...I am on my way of creating my own social enterprise, so this one will help a lot on that regard.
    • Mylswamy Annadurai 20th July afternoon??


    • Dhavappudhalvan Badrinarayanan A M Wish you all the best Mr.@ Vijayakumaar Chandrasekar

    • Vijayakumaar Chandrasekar @Dhavappudhalvan.....Thanks much for your wishes sir......
      https://fbstatic-a.akamaihd.net/rsrc.php/v2/y4/r/-PAXP-deijE.gif