Saturday, January 12, 2013

ஆஸ்கார் விருது.


ஆஸ்கார் விருது.


புதுச்சேரி மையமான கதைக் களத்துடன், “லைஃப் ஆஃப் பை” என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படம், சமிபத்தில் வெளியிடப்பட்டுளது. இந்த படத்தில் குழந்தையை தாலாட்டுவது போல, ஒரு தமிழ் பாடலும் உள்ளது. இந்த பாடலை, பிரபல கர்னாடக இசைப்பாடகி, பாம்பே ஜெயஸ்ரீ, பாடியிருந்ததுடன், அவரே அந்த பாடலையும் எழுதியிருந்தார். 



இந்தியாவில் தயரிக்கப்பட்ட, “லைஃப் ஆஃப் பை” படம், ஆஸ்கார் விருதுக்காக சிறந்த திரைப்படம், சிறந்த பாடல் உள்பட 11 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழரான பாம்பே ஜெயஸ்ரீ கர்னாடக இசைப்பாடகியாக இருப்பினும், தமிழ் திரைப்படங்களிலும் பாடியுள்ளார். இவருக்கு ஆஸ்கார் விருது கிடைத்தால், ஆஸ்கார் விருது கிடைத்த இரண்டாவது தமிழராவார். 

முன்னதாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது நாம் அறிந்ததே. பிரபல கர்னாடக இசைப்பாடகியான, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கு “ஆஸ்கார் விருது” கிடைக்க வாழ்த்துவோம் நண்பர்களே!
-    
தவப்புதல்வன்.