Sunday, April 7, 2013

மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமணம்




 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் சார்பில், இன்று 07/04/2013 ஞாயிற்று கிழமை, சேலம் தமிழ் சங்கம், தமிழ் சங்கம் சாலை, சேலம்- 7ல்  சிறப்பாக  நடைப்பெற்றது . அதிலிருந்து சில காட்சிகள்.



 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் திரு. அத்தியண்ணா அவர்களுடன் 


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் உறுப்பினர் செல்வி. உமா மகேஸ்வரி எம்.காம் 


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணன் மணமக்களுடன்.


 சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின்  துணைத்தலைவர் திரு.பாலசுப்ரமணியம் 


நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி. கே.பழனிசாமி அவர்களுடன், சேலம் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர். திரு.எஸ்.சவுண்டப்பன் அவர்கள்.

சேலம் வசந்தம் வீடியோஸ் புகைப்படக்கலைஞர் திரு.வி. மதிவாணன்,  


மேடையில் விழா சிறப்பு அழைப்பாளர்கள்.


ஒரு கையும் ஒரு காலும் செயலிழந்த மாற்றுத்திறனாளி இளம் பெண், 
பி.ஏ., பட்டபடிப்பு முடிக்க கட்டணம் உதவி கேட்டு, தந்தையுடன்  எமை அணுகிய, செல்வி மாதேஸ்வரி. 


மேடையில் மணமக்கள், மாநில, மாவட்ட, நிர்வாகிகளுடன் யான். (படத்தின் வலது ஓரம்)


 தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத்தின் மானிலப்பொது செயளாலர். திரு.ஆவின்.கோபிநாத் அவர்கள், திரு. அத்தியன்னா அவர்களுடன் யான்.
சிறப்பு தேர்வாக சிவகெங்கை மாவட்டத்தை சேர்ந்த மணமக்களுடன், சண்முகம்,

Wednesday, April 3, 2013

வாய் பேசாதோர், காது கேளாதோர் தேர்தலில் போட்டியிட சட்டம்



தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மாற்றுத்திறனாளிகள், மூன்று சதவீதம் [3%] பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், உயர் கல்விக் கற்றவர்களாகவும், கருத்துப் பரிமாற்றத்தில் வல்லவர்களாகவும் உள்ளனர்.    [ * அப்படியா? அவ்வளவு தூரம் வாய்ப்புகளும், வசதிகளையும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய மற்றும் தமிழக அரசுகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதா!!!!!!! ]  

வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாமல் இருந்தனர். எனவே இவர்களும் போட்டியிட ஏதுவாக, 1994ம் ஆண்டு, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 37 – 3அ மற்றும் 38 – 3அ, ஆகியவற்றை திருத்தம் செய்து, 2012 நவம்பர் 16ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மானிய கோரிக்கையில் அரசு தெரிவித்து உள்ளது.
·         
அப்பாடா...! இப்போது சட்டத் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எப்பொழுது நடைமுறைக்கு வருமோ?

செய்தி:- காலைக்கதிர் நாளிதழ் ( 02/04/2013)
·          
·         வாய் பேசாதோர், காது கேளாதோர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக சட்டத் திருத்தம்  செய்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சார்பில்
எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.