Monday, December 28, 2015

கையால் இயக்கும் கார் - வாழ்த்துவோம்




கையால் இயக்கும் காரை வடிவமைத்த தமிழக மாற்றுத் திறனாளி இளைஞர்..!

மாற்றுத் திறனாளிகள் ஓட்டுவதற்கு வசதியாக கையால் இயக்கும் வகையில் காரை வடிவமைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் கும்பகோணத்தை சேர்ந்த உதயகுமார் என்ற தன்னம்பிக்கை இளைஞர்.

இவரும் 3 வயதிலேயே இரண்டு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர்தான். ஆனாலும், தனது விடா முயற்சியால் இந்த சிறந்த தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். பிரேக், கிளட்ச், ஆக்சிலேட்டர் ஆகிய அனைத்தயும் கால்களுக்கு பதிலாக கைகளால் இயக்கும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அத்தோடு, தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காரை வடிவமைத்து கொடுக்கிறார். மாற்றுத் திறனாளிகள் நன்மையை கருதி சேவை மனப்பான்மையோடு கட்டணம் எதுவும் பெறாமல் செய்து தருகிறார்.

எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயமாக கருதும் இந்த காலத்தில் உதிரிபாகங்களுக்கு செலவாகும் தொகையை தவிர கூடுதலாக தொகை எதுவும் பெறுவதில்லை என்கிறார். அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வியக்க வைக்கும் இந்த சாதனை இளைஞரை இதுவரை 15 கார் தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு தொழில்நுட்பத்தை பேரம் பேசியுள்ளனர்.

ஆனால், தனது தொழில்நுட்பத்தை யாருக்கும் விற்கப் போவதில்லை என்று நம்மிடம் மன உறுதியுடன் தெரிவித்தார். ஆல்ட்டோ போன்ற கார்களுக்கு ரூ.58,000 வரையிலும், டொயோட்டா பார்ச்சூனர் உள்ளிட்ட கார்களுக்கு ரூ.85,000 வரையிலும் உதிரிபாகங்களுக்கு செலவாகும் என்றார். இதுதவிர, 10,000 கிமீ.,க்கு ஒரு முறை சர்வீஸ் செய்வதற்காக ரூ.5,000 கட்டணமாக சேர்த்து செலுத்தினால் வீட்டிற்கே வந்து சர்வீஸ் செய்து தருவதாக கூறுகிறார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக கையால் இயக்கும் கார் தொழில்நுட்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தை ஐஐடி நிறுவனம் அங்கீகரித்துள்ளதோடு, ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளின் பிரபலமான கார் கம்பெனிகள் உதயகுமாரை அழைத்து அணுகியுள்ளனர். இதில், வேதனையான விஷயமே ஜெர்மன் நிறுவனங்களுக்கு தெரிந்த உதயகுமாரை, மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசோ தெரியவும் இல்லை, கண்டுக்கொள்ளவும் இல்லை.

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நட்பு வட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இதுபோன்று காரை வடிவமைத்து தர விரும்பினால் கீழ்க்கண்ட அலேபேசி எண்ணில் உதயகுமாரை தொடர்புகொள்ளலாம்.
உதயகுமாரின் அலைபேசி எண்: 0-9940734277.(படத்தில் உதயகுமார்)

நன்றி: Relaxplzz

Wednesday, November 25, 2015

நேசிப்போம்..



எல்லா உயிர்களையும்
நேசிப்போம்........


Saturday, July 25, 2015

வாழ்த்துக்களை பகிர்வோம் – இன்றொரு தகவல்







ஒரு நாள் செல்லிடை பேசியில் எமக்கொரு அழைப்பு. சேலம் மாவட்ட எடப்பாடி என்ற ஊரிலிருந்து பேசுவதாகவும், பி.ஏ. பொருளாதாரம் படித்துள்ள, 
வெளியே சென்றுவர இயலாநிலையுடன் சக்கர நாற்காலி 
துணையாக கொண்டு இயங்குகின்ற, கால்கள் செயலாற்ற ஒரு மாற்றுத்திறனாளி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட குமார்,

ஒரு பழைய கணினி ஒன்றை நண்பரொருவர் அன்பளிப்பாக கொடுத்திருப்பதாகவும், இணைய இணைப்புக்காக 
‘’டேட்டா கார்டு’’ ஒன்று கிடைத்தால் மிக்க உதவியாக இருக்குமென வேண்டுகோள் விடுத்தார். 
எமது மூலம் இச்செய்தியை அறிந்த முகநூல் நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியர் அவர்கள் தன்னிடமிருந்த ‘’டேட்டா கார்டு’’ஐ தனது தாயார் மூலம் மகிழ்வுடன் வழங்கினார்.

#அவருக்கு நமது மனமுவந்த வாழ்த்துக்களை பகிர்வோம் நண்பர்களே.


*புகைப்படத்தில்: நண்பர் திரு. அல்போன்ஸ் சேவியரின் தாயார் அவர்கள் வழங்க, குமாரின் அப்பா பெற்றுக் கொள்கிறார்.

Sunday, July 5, 2015

வாழ்த்துவோம் நண்பர்களே!




 இன்று முடிவுகள் வெளியிடப்பட்ட இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ள,டெல்லியை சேர்ந்த பெண்மணியான *ஈரா சிங்கால், ஒரு மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது. இவர்  இந்திய வருவாய் துறையில் அதிகாரியாய்  பணியாற்றி வருகிறார். அவரைக் குறித்து சிறு குறிப்பு:-


சட்டத்தை உடைத்து
சாதனை படைத்த
மாற்றுத்திறனாளி
.
ஐஏஎஸ் தேர்வில் தேசிய
அளவில் முதல் இடத்தைப்
பிடித்து மகத்தான
சாதனையைப்
புரிந்துள்ளார் ஐரா
சிங்கால். 31 வயதாகும்
மாற்றுத்திறனாளி
யான
ஐரா, ஐஏஎஸ் தேர்வில்
தேசிய அளவில்
முதலிடத்தைப் பெற்ற
மாற்றுத் திறனாளி என்ற
அசத்தலான சாதனைக்குச்
சொந்தக்காரராகி
உள்ளார். 

31 வயதாகும்
ஐரா சிங்கால் இந்திய
வருவாய் பணி (ஐஆர்எஸ்)
அதிகாரி ஆவார்.
ஆனால், இந்தப் பதவியைப்
பெற இவர் பல்வேறு
சட்டச் சிக்கல்களை ஆரம்ப
காலத்தில்
எதிர்கொண்டார். மாற்றுத்
திறனாளியாக
இருந்ததால் பல
சிக்கல்களுக்கு ஆளானார். 

.
நீ ஒரு மாற்றுத்
திறனாளி. உன்னால்
தனியாக நிற்கக்கூட
முடியாது.
துப்புரவுத்
தொழிலாளியாக
இருக்கக் கூட
லாயக்கில்லை என 

அண்டை வீட்டாரின் கேலி, உடன்
படித்தவர்களின்
கிண்டல்களால் சிக்கி சில சமயங்களில் 
துவண்டபோதும் மனம்
தளறவில்லை.


 அசராத மன
தைரியத்தால் இன்று
ஐஏஎஸ் தேர்வில்
முதலிடம் பெற்று
முத்திரை பதித்தவர்
ஐரா. டெல்லியைச் சேர்ந்த
ராஜேந்திர சிங்கால்,
அனிதா சிங்கால்
தம்பதியின் ஒரே மகள்
ஐரா சிங்கால். லாரென்டோ
கான்வென்ட் பள்ளியில் 10-
ஆம் வகுப்பு முடித்த
ஐரா, தௌலா கானில் உள்ள
ராணுவப் பள்ளியில் 12-
ஆம் வகுப்பை முடித்தார்.
இதையடுத்து, நேதாஜி
சுபாஷ் தொழில்நுட்பக்கல்வி நிறுவனத்தில்
பி.இ (கணினிப் பொறியியல்) 

பட்டப்படிப்பு முடித்தார்.
பின்னர் டெல்லி
பல்கலைக்கழகத்தி ல்
எம்பிஏ (விற்பனை,
நிதி) முதுகலைப்
படிப்பிலும் தேர்ச்சி
கண்டார்.
அப்போது இவருக்கு
வேலைவாய்ப்புக்
கிடைத்தது.
இதையடுத்து, 2008
முதல் 2010 வரை
காட்பரி இந்தியா
நிறுவனத்தில்
வாடிக்கையாளர்
மேம்பாடு
அதிகாரியாக
பணியாற்றினார்.
முதுகுத்தண்டு
வளர்ச்சி குறைபாடால்
பிறவியிலேயே
பாதிக்கப்பட்ட
இவருக்கு அரசுப்
பணியில் சேர வேண்டிய
ஆர்வம் சிறு
வயதிலிருந்தே உள்ளது.
அதனால் பட்டப்படிப்பு
முடித்தது, மத்திய
அரசுப் பணிகள்
தேர்வாணையமான(யு
பிஎஸ்சி) தேர்வுக்கு
ஆயத்தமாகி வந்தார்.
2010-இல் நடந்த தேர்வில்
இவர் தேர்ச்சி பெற்று
ஐஆர்எஸ் பணியை
இவருக்கு வழங்க மத்திய
அரசு இசைவு
தெரிவித்தது. இதைத்
தொடர்ந்து, மருத்துவத்
தகுதிப்
பரிசோதனைக்கு இவர்
ட்படுத்தப்பட்டார்.
அப்போது இவருக்கு
பல்வேறு சோதனைகள்
வந்தன.
மாற்றுத்திறனாளியாக
ஐரா சிங்கால்
இருந்தது, ஐஆர்எஸ் பணி
அதிகாரி வெறும் 4.5
அடி மட்டுமே உயரம்
இருப்பதால் அவரால்
அப்பணியை செய்ய
முடியாது என்று கூறி
அவருக்குப் பணி வழங்க
மத்திய அரசு
மறுத்துவிட்டது.
இதனால் கடும்
கோபமடைந்த ஐரா,
மத்திய நிர்வாகத்
தீர்ப்பாயத்தில்
வழக்குத் தொடர்ந்தார்.
அதில் அவருக்கு
சாதகமாகத் தீர்ப்பு
வந்தது. இதையடுத்து,
2013-இல் ஐஆர்எஸ்
அதிகாரியாக
நியமிக்கப்பட்ட அவர்
மத்திய சுங்கத்
துறையில் உதவி
ஆணையராகத் தற்போது
டெல்லியில் பணியாற்றி
வருகிறார். அரசுப்
பணிக்கு வரும்
முன்னதாகவே தனது
உரிமையை நிலைநாட்டி
வழக்குத் தொடர்ந்தவர்
ஐரா. கால்பந்துப்
போட்டியில் அதிக
ஆர்வமுடையவர். சட்டம்
என்பது அனைவருக்கும்
ஒன்றே தாரக மந்திரம்
கொண்டவர். விடா முயற்சி
விஸ்வரூப வெற்றி என்ற
சொல்லை அடிக்கடி
சொல்லிக் கொள்வாராம்.
ஆங்கிலம், ஹிந்தி மொழி
மட்டுமன்றி ஸ்பெயின்
நாட்டின் ஸ்பானிஷ்
மொழியையும் சரளமாகப்
பேசும் திறனைப்
பெற்றுள்ளார் ஐரா
சிங்கால்


தமிழகத்தைப் பொருத்தவரையில் இந்திய சிவில் சர்வீஸ் ( குடிமுறை அரசுப் பணி) தேர்வில், 118 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். வனத்துறை அதிகாரியான கோவை சாருஸ்ரீ, அகில இந்திய அளவில் 6ம் இடமும்,  தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.

*முதலிடம் பெற்றுள்ள மாற்றுத்திறனாளி யான ஈரா சிங்கால் தமிழகத்தில் வெற்றிப் பெற்றுள்ள அனைவரையும் வாழ்த்துவோம்.

‪#‎பாராட்ட நினைத்தால் கருத்திடுங்கள்

Wednesday, July 1, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கு மாதிரி பள்ளிகள்


தமிழகத்தில், மாற்றுத் திறனாளி மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில், மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளியை, மாற்றுத் திறனாளிகளுக்கான  மாதிரி பள்ளியாக மாற்ற, மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களை, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவு இட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் மாணவர்கள் மற்ற மாணவர்களுடன் அமர்ந்து படிக்கும் வகையில் வகுப்பறை சூழல், சிறப்பு வசதிகளுடன் கூடிய கழிவறை, குடிநீர், சாய்தள வசதி போன்றவற்றை மேம்படுத்த உத்திரவு இடப்பட்டுள்ளது.
வந்து செல்ல சிரமமில்லாத வகையில் மாதிரி பள்ளியை தேர்வு செய்யும் பணியுடன், நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
- நாளிதழ் செய்தி,

#இதை வரவேற்கின்ற இச்சமயத்தில், ஒரு  மாற்றுத் திறனாளி என்ற முறையில் எமக்கு சில சந்தேகங்கள்:-


1) அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழெனில், அனைத்து அரசு பள்ளிகளிலும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் தானே, அருகில் உள்ள பள்ளிகளில் வந்து அனைத்து   மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து படிக்கயியலும்!
2) மாவட்டத்திற்கு ஒன்று என்றால், அந்த மாவட்டத்திலுள்ள மற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் வந்து தங்கி படிக்க ஏற்பாடு செய்ய முடிவெடுக்கப் பட்டுள்ளதா?
*ஆமெனில்,
செய்தியில் தெளிவு படுத்தபடவில்லையே.
3) சிறப்பு வசதிகள் என்றால்,
a) நடக்கவியலா  மாற்றுத் திறனாளி மாணவர்கள் வகுப்பறையில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வாசிக்கவும்,
b) உயர குறைப்பாடு உள்ளவர்கள் அமரும் வகையில் உயர்த்தி தாழ்த்தும் வகையில் வசதியான தனி நாற்காலிகள் வழங்கப்படுமா?
c) பார்வை  குறைபாடு உள்ளவர்களுக்கு முன்னிருக்கைகளில் அமர வசதி, மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படுமா? 
d) பார்வையற்ற, செவி கேளா மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க, அப்பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுமா? தனி சிறப்பு ஆசிரிய பணியிடங்கள் உருவாக்கப்படுமா?
4) கழிவறைகளின் அமைப்பு சாய்தளத்துடன்  இருந்தாலும், உயரமாக அமைக்கப்பட்டிருந்தால்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின்  அவசரத்துக்கு உதவாமல் அல்லல்பட வைக்கும் 
*தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பொது கழிவறைகள் அனைத்தும் சாய்தளத்துடன் அமைக்கப்பட்டிருப்பினும், தரைதளத்தில் வசதியாக சென்று பயன்படுத்தும் வகையில் இல்லாமல் உயரத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது.
இதை கவனித்தில் கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் இலகுவாக பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதால், இந்திய வகை, மேல்நாட்டு வகையென இரு வகையும் கைப்பிடிகளுடன் கூடிய விசாலமான கழிவறைகள் சக்கர நாற்காலிகள் சிரமமில்லாத வகையில் உள்ளே சென்று திரும்பி வெளிவரும் வகையில் அமைக்கப்பட வேண்டும், சிறுநீர் கழிப்புக்கும் வசதியான அமைப்புகளை அமைக்க வேண்டும், உடனுக்குடன் சுத்தமாக, உலர்நிலையில் பராமரிக்க ஆண், பெண்  பணியாட்கள் நியமிக்க பட வேண்டும். 
*குறைவற்ற நீர்   வசதியும் செய்யப்பட வேண்டும் 


#மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை  வசதிகளுடன் மாதிரி பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், அவசரகதியில் இக்கல்வியாண்டிலேயே துவக்குவதை விட, சரியான திட்டமிடலுடன், முழுமையான வசதிகளுடன் உருவாக்கி அடுத்த கல்வியாண்டில் தாமதமின்றி செயல்படுத்தினால், தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும்  சிறப்பையும் பெருமையையும் அளிக்கும்.

Tuesday, March 31, 2015

செயற்கை பார்வை தரும் நவீன கருவி



செயற்கை பார்வை தரும் நவீன கருவி இந்தாண்டுக்குள் இந்தியாவில்.
வரவேற்கிறது இந்தியா
கண்கள் இல்லாத எம்மக்கள் ஒளிபெற..!

 

Thursday, March 26, 2015

தன்னம்பிக்கையாளர்கள் -1





மாற்றுத்திறனாளிகளான இவர்கள் சாதனையாளர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையாளர்கள். எமக்கு   அறிமுகமாகும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும்  மாற்றுத்திறனாளிகளை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.

1) திரு.மனோகரன் அவர்கள் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியாகவும்  மூத்தக்குடிமகனாகவும் இவர், இருப்பினும், இந்த வயதிலும் மனைவியாரின் துணையுடன் சேலத்தில் உணவகம் நடத்தி வருகிறார். 
#காய்கறி சந்தையில் சந்தித்து உரையாடியபோது.



2) இடது கை பிறவியிலேயே செயலிழந்த திரு.இர்ஃபான், 6ம் வகுப்பு வரை படித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார்.



3) திரு.செந்தில்குமார் கால்கள் பாதிக்கப்பட்ட  மாற்றுத்திறனாளி. திருமணமாகி , குழந்தை செல்வங்களும் உண்டு. சேலத்தில் வெள்ளி பட்டறையில் பணிபுரிகிறார்.  சேலம் ஹஸ்தம்பட்டியில் சந்தித்தபோது.



4) திரு.சக்திவேல் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. இவருடைய மூன்று சக்கர கைமிதிவண்டியையே கடையாக அமைத்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில்  நொறுக்குத்தீனி ( Snacks ) விற்பனை செய்கிறார்.யாரொருவர் பணிபுரிய தகுதியிருந்தும் சோம்பலாய் இருந்து, யாசகமாய் உணவு உண்பவர்களை, கடுமையாக சாடும் வாசகங்களை தனது கடை வண்டியில் ஒட்டியிருக்கிறார். 


#தற்போது இவருக்கு தேவையான உதவி: வருமானத்தை அதிகரிக்கும் ''விதமாக ''டம் டீ, காபி'' விற்க 10 லிட்டர் கொள்ளளவு உடைய கேன்னை யாராவது வாங்கி  கொடுத்தால், தனக்கு மிகவும் உதவியாக   இருக்குமென கருதுகிறார். உதவ    விரும்புபவர்கள் , எம்மை தொடர்புக் கொள்ளவும்.. நேரடியாக அவரிடமே  நீங்கள் வழங்க விரும்பினாலும்  வழங்கலாம்.

நேசமிகு நாளாகட்டும் நட்புகளே.



















மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா - 2015

சென்ற  மார்ச் 8, 2015. ஞாயிறு கிழமை காலை 

சேலம் தமிழ் சங்க அரங்கத்தில் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கமும், சேலம் காஸ்மாஸ் அரிமா சங்கமும் இணைந்து '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' நடைப்பெற்றது. அதில் சில கட்சிகளும், செய்திகளும்.

 தலைமை உரையாற்றிய:
1)  சேலம் மாவட்ட சங்க த் தலைவர் அரிமா Dr.P. அத்தி அண்ணா MJF 


முன்னிலை வகித்தவர்களில் சிலர் :
2) சேலம். நரசுஸ் காபி கம்பெனி லிமிட்டெட், மேலாண்மை இயக்குனர் திரு..சிவானந்தம்,



3) சங்க நிரந்தர காப்பாளர் அரிமா Dr. Love  'O'  A.K.நாகராஜன் MJF 



சிறப்பு அழைப்பாளர்கள்:
4) சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.K.மகரபூஷணம் IAS  



5) தென்னக இரயில்வே, சேலம் டிவிஷன், 
சீனியர் டிவிஷனல் கமர்சியல் மேனேஜர் திரு K,P.தாமோதரன் 



மற்றும் பலர் வாழ்த்துரை வழங்க   '' மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழா'' சிறப்பாக நடந்தேறியது..

6) விழா துவங்கும் முன் சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க ஆலோசகரான எம்முடன், எமக்கடுத்து  வீற்றிருக்கும் மாவட்ட சங்க  துணைத்தலைவர் திரு R.அரவிந்தகுமார் B.A.,  மாவட்ட சங்க பொருளாளர் திருS.வெங்கட்ராமன் B.Sc.



7) திருமண ஜோடிகளில் ஒருவரும், எமக்கு முன்பே அறிமுகமான இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி நண்பருமான கிராபிக் டிசைனராக பணிபுரிந்து வரும் K.செந்தில் குமார் தனது மனைவி திருமதி V.வித்யாவுடன். அவர் மனைவியும் ஒரு இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி  என்பது குறிப்பிடத்தக்கது.



8) யான் தருமபுரி மாவட்ட சங்க பொதுசெயலாளராக செயலாற்றி விடுபட்டபின் திருமதி  ஜானகி அவர்கள் அமரராகும் வரை பொறுப்பிலிருந்தார்கள். அவருக்குப்பின் பொறுப்பேற்ற   தருமபுரி மாவட்ட உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கத் தலைவர் திரு Ln.K.A.மாணிக்கம் அவர்களும், சங்க நிர்வாகிகளுடனும்  




9) கவிஞர் அரிமா திருமதி.மாலதி அனந்தபத்மநாபன், தருமபுரி அவர்களுடன். #இவரும் ஒரு மாற்றுத்திறனாளியே. மாற்றுத்திறனாளிகளின் சேவையில் ஈடுபாடு கொண்டு செயல்பட்டு வருபவர்.   



10) இவ்விழாவிலே புதிதாக அறிமுகமான S.வேணுகோபால் , இரு கால்களும் செயலிழந்த  ஒரு மாற்றுத்திறனாளி தான். கைப்பேசி பழுது நீக்கும் கடையில் பணியை கற்று, தன்னம்பிக்கையுடன் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிபேட்டை பேருந்து நிலையம் எதிரில் கைப்பேசி பழுது நீக்கும் கடையை தனியாக நடத்தி வருகிறார். #கைப்பேசி பழுது நீக்கும் பயிற்சியை, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கற்றுத்தர  இருக்கிறார். விருப்பமுள்ளவர்களும், வாழ்த்தவும், கைப்பேசி பழுது நீக்க தொடர்புக் கொள்ள  விரும்புபவர்களும் இக்கைப்பேசியில் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்:   
தொடர்பு எண்:98425 87269   








11) இப்பெண்ணும்  இவ்விழாவிலே புதிதாக அறிமுகமானவர்.  அறக்கட்டளை நடத்தி வருவதாக அறிந்துக் கொண்டேன். இவரின் அறிமுகம் என் வாழ்வில் எமக்கொரு பாடமாகும், பெயர் நினைவிலிருந்து அகன்று விட்டது.




12) திரு.குமார் விழா நடைபெறுவதற்கு   முதல் வாரத்தில் நான் சென்ற வழியில் இவரை அறிமுகப்படுத்திக் கொண்டேன். இவரும் மீண்டும் எம்மிடம் பேச விரும்பினார். இவ்விழா ஒரு வாய்ப்பாக அமைய அவரையும் அழைத்தேன். வந்தவர், அவருக்கும் பெண் தேவையென கேட்க, மாவட்ட தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்து தந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். 



13) மணமக்களில் ஒரு பகுதி 





14) தருமபுரி மாவட்ட சங்க செயலாளர் 



15) திரு.இரா.மணி அவர்கள்,  அரசு பட்டுப்புழு வளர்ப்பு துறை ஆய்வாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.



மேலும் சிலருடன் அறிமுகமும் உரையாடும் வாய்ப்பும்  கிடைத்தது. 

#ஆனால் தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுசெயலாளர் திரு. ஆவின் k.கோபிநாத் BE., M.BA., MSW அவர்களை சந்திக்க ஆவலுடன் எதிர்நோக்கி, வராமையால் ஏமார்ந்தேன்  நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.


 
நட்புகளுக்கு அன்பான நன்னாள் வாழ்த்துக்கள்.

Wednesday, March 18, 2015

மாற்றுத்திறனாளருக்கான ஓய்வூதியம்



மத்திய அரசு வழங்கும் மாற்றுத்திறனாளருக்கான ஓய்வூதியம் அதிகரிப்பு

#‎குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள்‬ - விழிப்புணர்வு பயணம்






#‎குழந்தைகளை_பள்ளிக்கு_அனுப்புங்கள் என்று விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் ஒரு மாற்றுத்திறனாளி

 குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கார் என்ற மாற்றுத்திறனாளி காஷ்மீரில் தொடங்கி இந்தியா முழுவதும் சைக்கிளில் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் நேற்று புதுச்சேரிக்கு வந்தபோது எடுத்த படம்.


நன்றி:
Saravanakumar Velusamy
சரவணக்குமார் வே (கிராமத்து இளைஞன்)

*யார் எப்படிப்போனால் எனக்கென்ன என்று திரிபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு மனிதர்

Wednesday, February 25, 2015

தளரா தன்னம்பிக்கை. வாழ்த்துவோம்.






தளரா தன்னம்பிக்கை.
வாழ்த்துவோம்.



https://www.facebook.com/photo.php?fbid=559175377552940&set=gm.1546569912260483&type=1&theater