அட இதுயென்ன மகிழ்ச்சிக்குறிய செய்தியா ?, இதில் ஆனந்தப்பட என்ன இருக்கிறது ? என நினைப்பது புரிகிறது. சிறிது கீழே வாசித்துப் பாருங்களேன்.
தகவல்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அமெரிக்காவை உதறிவிட்டு இந்தியா திரும்பும் நிலை அதிகரித்து வருகிறது.இந்தியாவில் படித்து முடிக்கும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் அனைவரும் அமெரிக்காவில் வேலைப்பார்க்க வேண்டும் என்ற கனவு கானும் நிலை மாறிவருகிறது.அமெரிக்காவில் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்கள் கூட தாயகம் திரும்ப விரும்புவதாக சமிபத்தில், இண்டஸ் என்ற நிறுவனம் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ளது. கடந்த சில வருடங்களில்60 ஆயிரம் பேர் இந்தியா திரும்பி விட்டதாக சர்வேயில் தெரியவந்துள்ளது.
காரணங்கள் ;;
1) இந்தியாவில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள்,நிதி நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்வதால், இந்தியாவில் அதிக வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்கள் கருதுகிறார்கள்.
2)இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ந்து வருவதால், அமெரிக்க நிறுவனங்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்க முன்வருவதும்,
3) முக்கியமாக 27 முதல் 35 வயதுக்குட்பட்ட தம்பதிகள் பலர் இந்தியா திரும்ப விரும்புகிறார்கள். இதிலும் பெரும்பாலோர் தங்கள் குளந்தைகளை மேற்கத்திய நாகரீகத்திலிருந்து காப்பாற்றவும், இந்திய சூழ்நிலையில் படிக்க வைப்பதற்காகவும், இந்தியா திரும்ப விரும்புவதாக கூறியுள்ளதை முக்கியமாக கவணிக்க வேண்டும்.
இது எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயமாக உள்ளது. இங்குள்ளவர்களோ மேல்நாட்டுமோகத்தில், அதே போல் இங்கேயே நடக்க துடிக்க, இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று இங்கிருந்து சென்ற நம்மவர்களோ, திரும்பி வர முயற்சி செய்து வருகிறார்கள். அதை இங்குள்ளவர்கள் உணர்ந்து நமது கலாச்சாரத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
Wednesday, September 12, 2007
Wednesday, August 8, 2007
ஜீவன்களின் நட்பு
வெவ்வேறு வீடுகளில் வளர்ந்தாலும், இனத்திலும் மாறுப்பட்ட இரண்டு வாயில்லா ஜீவன்களின் நட்பைப் பற்றி பார்போமா !
ஆந்திர மாநிலம் மெகபூப் நகர் மாவட்டம் தேவரகத்ரா ரயில் நிலையப் பகுதியில் வசிக்கும் கவுஸ்பாபா, நான்கு ஆண்டுகளுக்கு முன், வீட்டில் வளர்பதற்காக இரண்டு வாத்துகளை வாங்கி வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த எக்தான், ஒரு நாயை வளர்த்து வருகிறார். தினமும் காலை நேரத்தில் இரைத் தேட, இந்த வழியாக செல்லும் இரண்டு வாத்துகளில் ஒரு வாத்துக்கும், இந்த நாயிக்கும் நட்பு ஏற்பட்டது. கிராமத்தில் தினமும் சந்தித்துக் கொண்ட நாயும், வாத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றை ஒன்று பிரியா நண்பர்களாகி விட்டன.
இந்த நட்பிலே விசேஷம் என்னவென்றால்,இந்த கிராமத்தினர் யாரேனும் வாத்தை அடிக்கவோ, துரத்தவோ வந்தால், நண்பனான நாய் அவர்கள் மீது கடிக்கப் பாய்கிறது. அதேபோல நாயை அதட்டினாலோ, துரத்தினாலோ, வாத்து சிறகை விரித்தபடி,ஓவென கூச்சல் போட்டுக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்து ஓடுகிறது. சில நேரங்களில் தனியாக செல்லும் நாயோ, வாத்தோ நீண்ட நேரம் ஒன்றை ஒன்று காணவில்லையென்றால் கவலையுடன் அங்குமிங்கும் கத்தியபடி அலைகின்றன.
பகல் நேரத்தில் இணைந்தே திரியும் நாயிம் வாத்தும் இரவு நேரத்தில் அவரவர் எஜமானர்களின் வீடுகளுக்குச் சென்று அடைந்து விடுகின்றன. மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்பே இரண்டும் இரைக்காக கிராம சந்துபொந்துகளில் இணைந்தே திரிகின்றன.இப்பகுதி மக்களிடையே இந்நட்பு பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

Sunday, August 5, 2007
டாக்டரின் நன்றிக்கடன் !!!........
தன்னை வளர்த்து ஆளாக்கிய கிராம மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியுள்ளார் அமெரிக்காவில் வசித்து வரும் கோடீஸ்வர டாக்டர். தனது கிராமத்திற்காக அவர் அளித்துள்ள தொகை ரூ.125 கோடி!!!!!!!!!!
கேரளாவில் செம்மங்கரை என்ற சிறிய கிராமத்தில் 81 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர் குமார் பாயுல்யன். தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஆதி திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் மிகவும் ஏழைகள். படிக்க வைக்க ஆட்களில்லை. ஆனால் படிக்க வேண்டும் என்று குமாருக்கு மிகவும் அதிக ஆசை. உதவ வந்தனர் கிராம மக்கள்.
அவர்கள் உதவியால் நன்கு படித்தார். பள்ளியில் படிக்கும் போது செருப்பு கூட போட வசதியின்றி இருந்தார். பள்ளி இறுதித்தேர்வில் பெற்ற சிறப்பான மதிப்பெண்கள், மருத்துவ கல்லூரியில்முன்னணி கிடைக்க செய்த்து. அரசின் உதவித்தொகை மற்றும் கிராம மக்களின் உதவியால் சிறப்பாக படித்து முடித்தார். கல்லூரியில் தான், முதன் முறையாக ஷூ அணிந்தார்.
அமெரிக்காவில் வேலை கிடைத்து அங்கு சென்றார். நரம்பியல் துறையில் கைத்தேர்ந்த நிபுணராக ஆனார். இவர் சிகிச்சையால் நோயாளிகள் விரைவில் குணமடைந்ததால், அதிக நோயாளிகள் இவரிடம் குவிந்தனர். பணம் கோடிகோடியாக இவரிடம் குவிந்தது. மிக விலை உயர்ந்த மெர்சிடஸ் பென்ஸ் கார்கள் ஐந்துக்கும், ஒரு விமானத்திற்கும் இவர் சொந்தக்காரராக இருந்தாலும், தமது சொந்த கிராமத்திற்கு வந்து சில நாட்கள் தங்கி விட்டு அமெரிக்காவுக்கு திரும்பிய டாக்டர் குமார், தமக்கு உதவிய சொந்த கிராம மக்களுக்கே, தான் சம்பாதித்த பணத்தில் பெரும்பகுதியை செலவிட முடிவு செய்தார். அதனால் செம்மங்கரை கிராமத்தில் மிகப்பெரிய நரம்பியல் மருத்துவமனையும், ஒரு இயற்க்கை மருத்துவமனையும் நிறுவ ரூ.125 கோடி அளித்துள்ளார்.
'நான் பிறக்கும் போது எதுவும் என்னிடம் எதுவுமில்லை. என்னை படிக்க வைத்தவர்கள் என் கிராமத்து மக்கள். அவர்களுக்கு கைமாறு செய்ய வேண்டாமா ? அது தான் இந்த சிறிய உதவி' என்று சுருக்கமாக கூறுகிறார் டாக்டர். குமார்.
எனக்கு வயது 81 ஆகிவிட்டது.வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்று நான் நினைத்த அத்தனையும் சாதித்து விட்டேன். 'என்னை இந்தளவுக்கு உயர்த்திய என் கிராம மக்களுக்கு கைமாறு செய்வது தான் எனது கடைசி லட்சியம். எந்த நேரத்திலும் சாவு ( மரணம்) என்னைத்தேடி வரலாம், அப்போது மகிழ்ச்சியான மனிதனாக சாவேன்'என்று டாக்டர். குமார் கூறியது, மனத்தை உருக செய்வதாக உள்ளது.
மரணம் அனைவருக்கும் பொதுவானதுதான்,ஆனாலும் இப்படிப்பட்ட ஒரு நல்லிதயம் படைத்த இம்மருத்துவருக்கு இயற்க்கையின் அழைப்பு மகிழ்ச்சியாக அமைய நம்மைப் படைத்த இறைவனை மனமுருக பிரார்த்தனை செய்துக் கொள்வோம்.

Tuesday, July 10, 2007
23 ஆண்டுகளுக்கு பின் ஆனந்தம்
காது கேட்காத, வாய் பேச முடியாத தந்தையை 23 ஆண்டுகளாக பிரிந்து சவுதி அரேபியாவில் வாழ்ந்த மகள், தந்தையை கண்டுப் பிடிக்க எடுத்த முயற்சி வெற்றி அடைந்து ஆனந்தத்திலே முடிய உள்ளது.
1984ம் ஆண்டில் எட்டு வயதாக இருக்கும்போது (தற்போது 32 வயது ), தந்தையையும், சகோதரிகளையும் பிரிந்து விட்டேன். தந்தையை நினைத்து அழுதுக் கொண்டே இருக்கிறேன். அவர் இருப்பிடமும் தெரியவில்லை. அவரை கண்டுப் பிடித்துத் தர முடியுமா ? என
சென்னையிலுள்ள ஒரு தனிஇயார் துப்பறியும் நிறுவனத்தை அனுக, அவர்களும் தேவையான தகவல்களைக் கேட்க, எங்கள் வீடு அண்ணா நகர், தாய் சிறு வயதிலே இறந்து விட, பாட்டி தான் வளர்த்தார். வீட்டுவேலைச் செய்ய, சென்னையிலுள்ள ஒரு போலீஸ்காரர் வீட்டில் சேர்த்து விட்டனர். போலீஸ்காரர் குடும்பத்தினர் என்னைக் கொடுமைப் படுத்த, அங்கிருந்து வெளியேறி, எனது வீட்டைத் தேடி, தவறுதலாக சென்னை அண்ணா நகருக்குச் செல்ல, அங்கே முஸ்லீம்காரர், அவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கும் கொடுமைகள் தொடர்ந்தது, மீண்டும் அங்கிருந்து தப்பித்து, கன்னட பிராமனர் வீட்டில் வேலைக்கு சேர, அவர்கள் என்னை நன்றாக கவனித்து, வளர்த்து, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்து வைத்தனர் என நசீமா கூற,
மேற்படித் தகவல்களை வைத்து மிகவும் சிரமப்பட்டு, பல தடங்கல்களுக்குப் பிறகு, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை கிராமத்தில் உள்ள அண்ணா நகர் என்பதைக் கண்டுப் பிடித்து, அங்கு விசாரித்ததில், நசீமாவின் தந்தை இப்ராகிம் செரிப், ஆற்காட்டில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருவதும், அருகிலுள்ள அவர் சகோதரர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. அவருக்கும் விபரங்களைக் கூறி, சவூதி அரேபியாவில் உள்ள நசீமாவிடமும் தந்தை கிடைத்து விட்டச் செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டது. கூடிய விரைவிலே இந்தியா வந்து தந்தையை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.
காது கேட்காத,வாய் பேச முடியாத, வாழ்விலே பெரும் பகுதியை சோகத்திலே கழித்த 65 வயதான தந்தைக்கும் ஆனந்தம், வருடங்கள் 23 கழிந்தாலும் பாசத்தின் வலிமையினால் தந்தையை கண்டு பிடித்திருக்கும் மகளுக்கும் ஆனந்தம். அவர்கள் வாழ்வில் ஆனந்தம் என்றென்றும் நிலைத்திருக்க நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.

Monday, July 9, 2007
ஆனந்தத்திலே ஆனந்தமாக ஆரம்பிப்பதை முதலில் எழுத நினைத்திருந்தேன்.
ஆனால் நாட்கள் தான் கடந்தன. எமது வாழ்வில் நடந்த ஆனந்தமான நிகழ்வுகளும் நினைவுக்கு தற்சமயம் வரவில்லை. நிகழ்வுகளும் கண்ணுக்குப் படவில்லை. இன்று முதல்முதலாக சோகத்திற்கு பின் விழைந்த ஆனந்தத்தை அறிந்துக் கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் ஆனந்தம் அடைகிறேன். இதை முன்னுரையாகக் கொண்டு அடுத்த பதிவிலே தகவலைத் தருகிறேன்.

Subscribe to:
Posts (Atom)