Saturday, December 27, 2008

NEW YEAR WISHES -- TAMIL

அன்புடையவர்களே,
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


ஆம்பல் இம்மலரை சுட்டியால் சொடுக்குங்கள். கவிதைமலர் தோட்டம் விரியும் உங்கள் கண் முன்னே. பிடித்த மலரை சுட்டியால் விரித்து பாருங்கள். மணம் பரப்பும். உகந்த மொழி ஒன்றிலே, கருத்துகளை கொட்டுங்கள் அல்லது குட்டுங்கள். உங்கள் கருத்தினால், வரவறிந்து பதில் நவில்கிறேன். உங்கள் வரவு எம் மலர் தோட்டத்தை மேலும் அழகுற செய்யும். இம்மலர் தோட்டத்தை பார்வையிட்டு கருத்து நவில, உறவுகளையும் நண்பர்களையும் அழைத்து அறிமுகப்படுத்துங்களேன்.

Please forward this message, Who knows TAMIL.
Visit my blog and commonts in your way.


உங்களுடன்,
தவப்புதல்வன்.


Friday, December 26, 2008

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

வார்த்தைகள் இல்லை பாராட்ட.

உத்திர பிரதேசம் லக்னோவில் உள்ள பாட்ஷா நகரை சேர்ந்த திவ்யா ( 21 ), இவரின் செயலுக்கு, சொல்லுக்கு, மேலும் சிறப்பான வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன். இவரது இளய சகோதரர் ஆபூர்வாவுக்கு திடீரென சிறுநீரகம் சரியாக வேலை செய்யவில்லை. உடனடியாக சிறுநீரக  மாற்று அறுவை செய்ய வேண்டுமென டாக்டர்கள் தெரிவிக்க, திருமணம் நிலையிலிருந்த நித்யா, தனது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தார்.
 இதை மாப்பிள்ளையின் பெற்றோர் விரும்பவில்லை. திருமணத்தையும் நிறுத்தி விட்டனர். ஆனால் மருத்துவமனையிலிருந்து திரும்பிய நித்யாவோ, நான் எனது கடமையை செய்தேன். புதிதாக வருகின்ற உறவுக்காக 21 வருட சகோதர உறவை விட முடியாது. மனிதநேயமிக்க மிக்க செயலாகத்தான் கருதுகிறேன் என்று கூறியதுடன், மேலுமொன்றை கூறியுள்ளார். அதற்காக தான் என்ன வார்த்தைகள் சொல்லி, எழுதி பாரட்டுவதென்றே தெரியவில்லை. ''என் திருமணத்தை நிறுத்தியவர்கள் மேல் எந்த கோபமும் கிடையாது''  என்ற இந்த ஒரு வார்த்தையே, அவரின் எண்ணத்தின் மேன்மையை பறைசாற்றுகிறது. அவரை ஞானியாக, இல்லை அதற்கும் மேலாக... என்னிடம் வார்த்தைகளில்லை பாராட்ட. ஆனால் ஒன்றே ஒன்றை செய்வேன், அவர் வாழ்நாள் முழுமையும் நோயு நொடியின்றி அனைத்து நலன்களும் பெற்று வாழ அருளும்படி இறைவனிடம் இன்றே வேண்டிக்கொள்வேன்

Friday, June 20, 2008

வேதனையில் சாதனை - 1

ஊனமுற்றோரின் உரிமைக்காக போராடும் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவரும், கம்ப்யூட்டர் நிறுவனத்தால் வேலையிலிருந்து துரத்தி விடப்பட்ட பார்வையிழந்த பெண்ணுமான ' சோனாலி ' தன்னம்பிக்கையை இழக்காமல் போராடி, தன்னைப் போன்ற பார்வையிழந்த மற்றவர்களுக்கு உதவி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளார். அவரைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோமா!



சில ஆண்டுகளுக்கு முன், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தார். திடீரென ஏற்பட்ட நோய் காரணமாக இவரது கண் பார்வை பறிபோனது. கம்பியூட்டர் நிறுவனம் உடனடியாக இவரை வேலையிலிருந்து துரத்தி விட்டது. பிறகு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.



பார்வை பறிபோனதற்காக, உரிமை மறுக்கப்படுவது குறித்து வேதனை அடைந்தவர், சாதித்துக் காட்ட வேண்டும் என உறுதி பூண்டார். அத்தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 'இந்திராகாந்தி தேசிய திறந்த நிலை பல்கலையில் படித்து பி.ஏ., பட்டம் பெற்றார். இதற்கிடையே தெற்காசிய பிராந்தியத்திற்கான பார்வையிழந்த பெண்களுக்கான தலைமைப்பண்பியல் குறித்த பயிற்சி திட்டம் கொல்கட்டாவில் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்கு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து 'சோனாலி ' தேர்வானார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்து திரும்பிய அவர், ஜாம்ஷெட்பூரில், பார்வையிழந்தவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமை துவக்கினார்.

இதன் முகாம் மூலம் பார்வையிழந்த ஏராளமானோருக்கு, பல்வேறு பயிற்சிகளை அளித்து, அவர்களது ஒளிமயமான எதிர்காலத்திற்கு உதவி வருகிறார். இதைபற்றி 'சோனாலி' கூறியதாவது;

கம்ப்யூட்டர் நிறுவனம் வேலையை பறித்தவுடன், சாதித்துக் காட்ட முடிவு செய்தேன். தன்னம்பிக்கையை இழக்காமல் போராடி, என்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு உதவும் அளவிற்கு உயர்ந்துள்ளேன். உடல் ஊனமுற்றோருக்கு உள்ள உரிமைகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். எதிர்கால வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துகிறேன். அடுத்தவர்களுக்கு உதவும் இந்த பணி, எனக்கு திருப்தியாக உள்ளது என்று 'சோனாலி' கூறியுள்ளார்.

இவரை போன்றவர்களை பார்த்தாவது நாமும், நம்மை உறுதி படுத்திக்கொள்வதுடன், மற்றவர்களுக்கும் முடிந்தவரை வழிகாட்டியாகவும் இருந்து உதவ வேண்டும்.