skip to main |
skip to sidebar
ஒற்றைக்காலோடு எவரெஸ்ட் சிகரத்தில் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா
# ஒற்றைக்காலோடு ’எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா#
மாற்றுத்திறனாளி இந்தியர் ’ அருணிமா#
# காத்மண்டு: நகை பறிக்கும் கும்பலால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்த முன்னாள் வாலிபால் வீராங்கனையான அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் எவரெஸ்ட்டில் ஏறி புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார்.உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா.உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அருணிமா சின்கா (வயது 25), வாலிபால் வீராங்கனை. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது. இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார்.சாதிக்கும் துடிப்பு...தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் சோர்ந்து போய் முடங்க விரும்பவில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப்பற்றி படித்து தெரிந்துகொண்டு அவர் தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார்.உறுதுணை...மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் துணையாகக் கொண்டு, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார்.முதல் மாற்றுத்திறனாளி...சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்ட அருணிமா, நேற்று காலை 10.55 மணிக்கு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார் #
No comments:
Post a Comment