Friday, October 18, 2013

பாரத நாட்டியத்தில் முஸ்லிம் பெண்- பாகிஸ்தானில் அரங்கேற்றம்

.

தாலிபான் பயங்கரவாத அமைப்பு, கலைகளுக்கு தடை விதித்ததால், அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான பாகிஸ்தானிய மக்கள், கலைகளை கற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கியே இருக்கின்றனர்.
அம்னா மவாஸ் என்னும் இளம் பெண் வீட்டுக்கருகே, இந்தியாவை சேர்ந்த இந்துசட்டர்ஜி   என்பவர், பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியை திருமணம் செய்துக் கொண்டு சுமார் 15 வருடங்களுக்கு முன்  குடியேறினார். அவர் பரத நாட்டியம் அறிந்தவர். ஆதலால் அவரிடம் அம்னா மவாஸ் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள விரும்பி 20 பேர் கொண்ட பெண்கள் குழுவுடன் பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

அம்னா மவாஸ் மட்டுமே முறையாக பரத நாட்டியத்தை கற்க, மற்றவர்கள், இடையிலேயே தங்கள் வீட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயந்து நின்று விட்டனர். இந்நிலையில் பல தடைகளையும், சர்ச்சைகளையும்  கடந்து, கணவரின் ஆதரவுடன் 14 ஆண்டுகளாக பரதத்தை விடாமல் கற்று, இஸ்லாமாபாத்தில் உள்ள குச் காஸ் என்ற இடத்தில் "எல்லோருக்கும் பாகிஸ்தான்" என்ற தலைப்பில் பாரத நாட்டியத்தை அரங்கேற்றியுள்ளார்.

இதற்கு அம்னா மவாஸ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், கணவர் வாக்கஸ் காலித்தின் ஒத்துழைப்பால், பாகிஸ்தானின் முன்னணி பாடகர் தைமூர் ரஹ்மான் இன்னிசை பாட, அம்னா மவாஸ் நடன மாட, ஹிந்துஸ்தானி ராகத்தில் பரதத்தை ஒலிக்கவும், ஒளிரவும் செய்துள்ளார். அதைக் கண்ட பாகிஸ்தானிய மக்கள் பிரமிப்பில் ஆழ்ந்து அனுபவித்தனர்.

** கல்வி புரட்சி பெண் மலாலாவுக்கு ஏற்பட்ட நிலை, இவருக்கும் வந்து விடக் கூடாது என பிரார்த்தித்துக் கொள்வோம்.  

No comments: