தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், கரம்பக்குடி கிளை சார்பில் கவிதை பயிலரங்கம் கரம்பக்குடி ரீனா மெர்சி பள்ளியில் நடைபெற்றது. கவிதை கண்காட்சி,கவியரங்கம்,விவாத மேடை,கவிதைகள் வாசித்தல்,மண் மணம் கமழும் பாடல்கள் என நாள் முழுவதும் கவிதை நிகழ்வுகள் அரங்கேறின. கவிதை கண்காட்சியில் காதல்,சமூகம்,பெண்ணியம் பேசும் கவிதைகள் அழகான ஓவியத்துடன் இடம் பெற்று இருந்தன.
நண்பர் ஸ்டாலின் சரவணன் Stalin Saravanan விருப்பத்தின்பேரில் எனது கவிதை ஒன்றும் அதில் இடம்பெற்றிருந்தது மகிழ்ச்சி!
கவிதை கண்காட்சியில் கூடுதல் சிறப்பு -ஓவியங்களை வரைந்தவர் வாய் பேசா காது கேட்கா மாற்று திறனாளி இளம் கல்லூரி மாணவி என்பது.அந்த பெண் தீட்டிய ஓவியங்கள் பார்ப்போரை நெகிழ செய்தது.
வினோதா என்ற அந்த மாணவி இளங்கலை ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு பயின்று வருகிறார். அவர் கவிதையைப் படித்து பொருளை உள்வாங்கி விரல்கள் வழியே ஓவியத்தில் இறக்கியது தனி ரசவாதம். அவர் பேசாததை அவரது ஓவியங்கள் பேச, பார்ப்போர் விழி வியந்தனர்!
# புகைப்படத்தில் வினோதாவின் ஓவியத்துடனான எனது கவிதையும், வரைந்த வினோதாவும்!
நன்றி :-
No comments:
Post a Comment