மாற்றுத்திறனாளிகளான இவர்கள் சாதனையாளர்களாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தன்னம்பிக்கையாளர்கள். எமக்கு அறிமுகமாகும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகளை உங்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர்களை வாழ்த்தி ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
1) திரு.மனோகரன் அவர்கள் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளியாகவும் மூத்தக்குடிமகனாகவும் இவர், இருப்பினும், இந்த வயதிலும் மனைவியாரின் துணையுடன் சேலத்தில் உணவகம் நடத்தி வருகிறார்.
#காய்கறி சந்தையில் சந்தித்து உரையாடியபோது.
2) இடது கை பிறவியிலேயே செயலிழந்த திரு.இர்ஃபான், 6ம் வகுப்பு வரை படித்து விட்டு குடும்ப சூழ்நிலையால் பெட்ரோல் பங்கில் பணிபுரிகிறார்.
3) திரு.செந்தில்குமார் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி. திருமணமாகி , குழந்தை செல்வங்களும் உண்டு. சேலத்தில் வெள்ளி பட்டறையில் பணிபுரிகிறார். சேலம் ஹஸ்தம்பட்டியில் சந்தித்தபோது.
4) திரு.சக்திவேல் இரண்டு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி. இவருடைய மூன்று சக்கர கைமிதிவண்டியையே கடையாக அமைத்து, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நொறுக்குத்தீனி ( Snacks ) விற்பனை செய்கிறார்.யாரொருவர் பணிபுரிய தகுதியிருந்தும் சோம்பலாய் இருந்து, யாசகமாய் உணவு உண்பவர்களை, கடுமையாக சாடும் வாசகங்களை தனது கடை வண்டியில் ஒட்டியிருக்கிறார்.
#தற்போது இவருக்கு தேவையான உதவி: வருமானத்தை அதிகரிக்கும் ''விதமாக ''டம் டீ, காபி'' விற்க 10 லிட்டர் கொள்ளளவு உடைய கேன்னை யாராவது வாங்கி கொடுத்தால், தனக்கு மிகவும் உதவியாக இருக்குமென கருதுகிறார். உதவ விரும்புபவர்கள் , எம்மை தொடர்புக் கொள்ளவும்.. நேரடியாக அவரிடமே நீங்கள் வழங்க விரும்பினாலும் வழங்கலாம்.
நேசமிகு நாளாகட்டும் நட்புகளே.



No comments:
Post a Comment